சூப்பர் சர்ப்ரைஸ்..தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பறந்த உத்தரவு.. "இந்த" நாளை மறக்காதீங்க மக்களே
சென்னை: ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, சார் பதிவாளர் அலுவலகங்களில் வழங்கப்படும் டோக்கன் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.. எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அனைத்துமே, முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்ய வேண்டும்..

இதற்கு பிறகு, பத்திரங்களின் அடிப்படை சரிபார்ப்பு முடிந்த பிறகு விண்ணப்பதாரரின் விருப்பம் மற்றும் சார்பதிவாளரின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், தமிழ்நாட்டில் அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களில், சில நாட்களுக்கு முன்பு ஆடி 18-ஐ முன்னிட்டு, பதிவுக்காக தரப்படும் டோக்கன்களில் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.. காரணம், ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி அதிகமாக ஆவணங்கள் பதிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது..
ஆடிப்பெருக்கு: அதாவது, ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கெனவே உள்ள 100 முன்பதிவு டோக்கன்களுடன் 50 முன்பதிவு டோக்கன்கள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி வருவாயும் அன்றைய ஒரே நாளில் ஈட்டப்பட்டது. அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் 03.08.2023 அன்றைய தினம் ஈட்டப்பட்டதாக பத்திரப்பதிவு துறையும் மகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அடுத்த கோரிக்கை: இப்படிப்பட்ட சூழலில், ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.. இந்த கோரிக்கையை பதிவுத்துறை ஏற்றுள்ளது..
அதன்படி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். ஆடிப் பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கடந்த 03.08.2023 அன்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
ஆவணி மாதம்: அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 14,449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. வரவிருக்கும் ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை ஏற்று ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும்..
தட்கல் முன்பதிவு: 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட வேண்டும்" என்று பதிவுத்துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்று அதில் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications