சசிகலாவுக்கு முற்றும் நெருக்கடி.. அதிமுக தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவிட்ட சைதாப்பேட்டை நீதிமன்றம்
சென்னை: சசிகலாவுக்கு எதிராக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க மாம்பலம் காவல் ஆய்வாளருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு வந்து அதிரடி காட்டினார். ஆனால் சென்னை வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அமைதி கொண்டார்.

சசிகலாவின் அதிரடி
ஆனால் சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் தனது அமைதியை கலைத்த சசிகலா அதிமுகவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதன்பிறகு தான் வெளியிடும் அறிக்கைகள், செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறத் தொடங்கினார்.

அதிமுக சார்பில் புகார்
தற்போது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற முழு மூச்சில் இறங்கியுள்ள சசிகலா அவ்வப்போது அதிரடி அறிக்கைகள் வெளியிடுவது, பேட்டிகள் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதற்கிடையே
அதிமுகவின் பொதுச் செயலாளர் என சசிகலா தன்னை பிரகடனப்படுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நாங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல்நிலைய போலீசாருக்கு அறிவுறுத்துமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை
கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனுவை தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் சசிகலா இந்த உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் மனுவில் அதிமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சைதாப்பேட்டை 17- வது நிதித்துறை நடுவர் கிருஷ்ணன் விசாரித்தார்.

சசிகலாவுக்கு நெருக்கடி
அப்போது அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் மாம்பலம் காவல் ஆய்வாளர் இது தொடர்பாக வருகிற 20-ம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்யும்பட்சத்தில் சசிகலாவுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications