எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி? வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் தீவிர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக் குழுவை கூட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து 13 முறை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியுற்றுள்ளது தொண்டர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்துவிட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக மாறியது.

ADMK

அதன் தொடர்ச்சியாக வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள், தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். பின்னர் அவர்களில் 6 பேர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனக்கு எதிராக செயல்பட்டோரின் கட்சி பதவிகளை பறித்தார். இதற்கு அதிருப்தியாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுத் தேர்தலில் அந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஒரு கட்சி, திடீரென 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போர்க்கொடி

இவ்வாறு தொடர்ந்து 13ஆவது முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தோல்வி அடைந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தவுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி தலைமையில் தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் சென்னை எம்ஆர்சி நகரில் வேலுமணி இல்லத்தி் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அப்போது அதிமுக பொதுக் குழுவை கூட்டுவதற்கு அனைவரும் வலியுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பொதுக் குழுவை கூட்ட முடியுமா?

அதிமுக விதிகளின்படி கட்சியின் பொதுக் குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கே உள்ளது. இவரோ அல்லது தலைமையின் முறையான அறிவிப்பு இல்லாமலோ பொதுக் குழுவை சில உறுப்பினர்கள் மட்டும் கூட்டினால் அது செல்லாது. கடந்த காலங்களில் உள்கட்சி பிரச்சனைகளின் போதே (ஒற்றை தலைமைக்கு எதிரான பிரச்சனை), பொதுக்குழு, செயற்குழுவை கூட்டுவது தொடர்பான சட்டவிதிமீறல்கள் கடுமையாக விளக்கப்பட்டன.

கட்சியில் இருந்து நீக்கம்?

எனவே எஸ்.பி.வேலுமணி கூட்ட நினைக்கும் பொதுக் குழுவானது கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலாக அமையும். இதனால் உடனடியாக அவர்கள் மீது கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம், பதவி பறிப்பு உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழல் உருவாகும்.

பொதுக் குழு கூட்ட வலியுறுத்தல்

கடந்த 2026 ஆம் ஆண்டு தேர்தல் தோல்வியின் போதிலிருந்தே பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என எஸ்பி வேலுமணி, சண்முகம் தரப்பு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். விரைவில் பொதுக் குழு கூட்டப்படும் என எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை கூட்டவில்லை.

எத்தனை தேர்தல்களில் தோல்வி?

இதுவரை எத்தனை தேர்தல்களில் அதிமுக தோற்றது என்பதை பார்க்கலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அதிமுக தோற்றது. சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வென்றார்.

படுதோல்வி

இதையடுத்து 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனியில் வென்றார்.

இதையடுத்து 2019 இல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அதிமுக 8 இடங்களில் மட்டுமே வென்றது. பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் பெரும்பான்மையை எடப்பாடி பழனிசாமி அரசு தக்கவைத்துக் கொண்டது.

உள்ளாட்சி தேர்தல்

அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல பகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வென்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெறும் 75 இடங்களில் வென்றது. அதில் அதிமுக மட்டுமே 66 தொகுதிகளில் வென்றது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

2021 ஆம் ஆண்டு நடந்த மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக தோற்றது. அது போல் 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உள்ளிட்டவைகளிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. பிறகு கன்னியாகுமரி லோக்சபை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியது.

2024 மக்களவை தேர்தல்

இதைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி அதிமுக முறித்துக் கொண்டது. அப்போது நடந்த தேர்தலில் அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

13 ஆவது தோல்வி

இதையடுத்து கடந்த 2026 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்தார். மேலும் 2026 இடைத்தேர்தல்களில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கடந்த முறை வென்ற அதிமுக, இந்த முறை 3ஆவது இடத்திற்கு சென்றது. எனவே இந்த தேர்தலுடன் சேர்த்து 13 தோல்விகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+