இபிஎஸ்-க்கு ஷாக் கொடுக்கும் எஸ்.பி.வேலுமணி அன்ட் டீம்? எம்ஆர்சி நகர் வீட்டில் எடுத்த முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்து 3ஆவது இடத்தை பிடித்தது. கடந்த பொதுத் தேர்தலில் இரு தொகுதியிலும் வென்ற அதிமுக, தற்போது படுதோல்வி அடைந்தது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

admk sp velumani cv shanmugam

இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

அதில் அதிமுக தொடங்கி 55 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற போகிறது. வரும் 17ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அந்த விழா தொடர்பான பொதுக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை கட்சித் தலைமை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவன நாள் பொதுக் கூட்டங்களை புறக்கணிக்கலாம் என எஸ்.பி. வேலுமணி தரப்பு முடிவு எடுத்திருக்கிறதாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடப் போகிறார்கள் என தெரிகிறது.

அது போல் இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்த எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருக்கு எந்த பொறுப்பையும் வழங்காமல் ஓரம் கட்டியது குறித்து அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் அதிமுக பொதுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கடந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளில் இருந்தே வேலுமணி தரப்பு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவே இல்லை. இந்த நிலையில பொதுக் குழு கூட்டுவது குறித்து கடந்த 3 தினங்களாக நடத்தப்படும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருவது கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனை தோல்விகள்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடந்தது. அதில் அதிமுக தோற்றது. சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வென்றார்.

இதையடுத்து 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.

22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்

இதையடுத்து 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அதிமுக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது. பாதிக்கு பாதி கூட வெல்லவில்லை. பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் பெரும்பான்மையை எடப்பாடி பழனிசாமி அரசு நிரூபித்து தனது தலைமையிலான ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார்.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி

அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பல பகுதிகளில் அதிமுக தோல்வியடைந்தது. இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வென்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெறும் 75 இடங்களில் வென்றது. அதில் அதிமுக மட்டுமே 66 தொகுதிகளில் வென்றது. பாஜக சார்பில் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே வென்றார். பாமக சார்பில் 5 பேர் வெற்றி பெற்றனர்.

உள்ளாட்சி தேர்தலிலும் அதிருப்தி

2021 ஆம் ஆண்டு நடந்த மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுக தோற்றது. அது போல் 2022 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் (திருமகன் ஈவெரா இறப்பால் நடந்தது)உள்ளிட்டவைகளிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. பிறகு கன்னியாகுமரி லோக்சபை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியது.

இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் என சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பேசியது, அதற்கு பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றியது உள்ளிட்ட காரணங்களால் 2024ஆம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

13 தோல்வி

இதையடுத்து கடந்த 2026 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்தார். மேலும் 2026 இடைத்தேர்தல்களில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கடந்த முறை வென்ற அதிமுக, இந்த முறை 3ஆவது இடத்திற்கு சென்றது. எனவே இந்த தேர்தலுடன் சேர்த்து 13 தோல்விகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது.

தேர்தல் புறக்கணிப்பு

அது போல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரு இடைத்தேர்தல்களை புறக்கணித்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது. அது போல் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இதையடுத்து கடந்த ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலையும் அதிமுக புறக்கணித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+