‛விபச்சாரி’ மகன் சர்ச்சை.. ஆ ராசாவ கூப்பிடுங்க நேருக்கு நேரா பேசுவோம்.. கொந்தளித்த நடிகை விந்தியா
சென்னை: ‛‛சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்'' என பேசி சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி ஆ ராசாவை அதிமுகவை சேர்ந்த நடிகையான விந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவின் துணை பொதுச்செயலாளராகவும், எம்பியாகவும் இருப்பவர் ஆ ராசா. அடிக்கடி சர்ச்சையாக பேசி வம்பில் மாட்டிக்கொள்வார். இவரது சமீபத்திய பேச்சு கூட இணையதளங்களில் வீடியோவாக வேகமாக பரவியது.
இந்த வீடியோவில் ஆ ராசா ‛‛இந்துவாக இருக்கும் வகை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை விபச்சாரியின் மகன்'' என பேசி சர்ச்சையை கிளப்பினார்.

விபச்சாரியின் மகனாக..
இதுதொடர்பாக ஆ ராசா பேசுகையில் ‛‛நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?. இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்?'' என்ற வகையில் பேசி இருந்தார்.

கடும் எதிர்ப்பு
இந்த பேச்சுக்கு இந்து அமைப்பினர், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆ ராசாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு மத்தியில் ஆ ராசாவின் பேச்சுக்கு தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

விந்திவிந்தியா கொதிப்பு
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளரும், நடிகையுமான விந்தியா திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார். குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக பேசிய திமுக எம்பி ஆ ராசாவை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக நடிகை விந்தியா பேசியாதவது:

எதுக்கு அறநிலையத்துறை அமைச்சர்?
எங்களுக்கு எல்லாம் கடவுள் இருக்கிறார். நாங்கள் அனைவரும் இந்துக்கள் தான். திமுக, ஆ ராசாவை பொறுத்தவரைக்கு இந்துக்களே இல்லையென்று வைத்து கொண்டால் அந்த கட்சியில் சேகர்பாபு என்பவர் ஏன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்?. இல்லாத ஒரு விஷயத்துக்கு எதுக்கு ஒரு அமைச்சர்? எதுக்கு ஒரு துறை? எதுக்கு ஒரு சம்பளம்?.

வரச்சொல்லுங்க பேசுவோம்
கலெக்சன், கமிஷன் என்று வந்தால் உங்களுக்கு வசதிக்கு ஏற்றபடி நடந்து கொள்வீர்களா?. யாரை ஏமாற்ற பார்க்கிறீங்க?. இந்துக்கள் என்றால் திமுகவுக்கு இழக்காரமாக போச்சு. ஆ ராசா பேச்சுக்கு எல்லாம் இங்கு பயப்படும் படியான ஆள் யாரும் கிடையாது. வரச்சொல்லுங்க பேசுவோம். இந்துத்துவா இருக்கா? இல்லையானு? ஒரே மேடையில் பேசுவோம். வரச்சொல்லுங்க ஆ ராசாவ'' என ஆக்ரோஷமாக கூறினார்.
-
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல் -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications