167 ல் அதிமுக வெற்றி சான்ஸ் பிரகாசம்! அந்த 50 இடங்கள் இடிக்குதே? எடப்பாடி இதை செய்தாலே போதுமே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கட்சிக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழ தொடங்கியுள்ளது.. சுமார் 167 தொகுதிகளில் இரட்டை இலை சின்னம் போட்டியிடும் சூழலில், கட்சியின் தூண்களாகக் கருதப்படும் 16 மாவட்டச் செயலாளர்களுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. இதில் சில முக்கிய "முகங்கள்" விடுபட்டுள்ளதாக தெரிகிறது..

எடப்பாடி பழனிசாமி
திருவண்ணாமலையில் தூசி மோகன் போன்றவர்கள் ஏற்கனவே தவெக பக்கம் சாய்ந்துவிட்ட நிலையில், ராமநாதபுரத்தில் முனியசாமி தனது மனைவிக்காக விட்டுக்கொடுத்து ஒதுங்கிக்கொண்டார்.
ஆனால் மற்ற மாவட்டங்களில் கதை வேறாக இருக்கிறது.. அம்பத்தூர் தொகுதியை எதிர்பார்த்த அலெக்சாண்டர், ஊட்டி தொகுதியை மலைபோல் நம்பியிருந்த நீலகிரி மா.செ., மடத்துக்குளம் தொகுதியை குறிவைத்த மகேந்திரன் எனப் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இந்த குறிப்பிட்ட தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தாரை வார்த்ததுதான் இந்த மோதலுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது..
அதேபோல விருதுநகர் பகுதியில் ரவிச்சந்திரன் தனக்குச் சீட் கிடைக்கும் என நம்பி ஏமாந்துள்ளார்.. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் ஜெயசுதர்சனுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள்
சேலம் போன்ற சொந்த மாவட்டங்களிலேயே இளங்கோவன் போன்ற முக்கியத் தலைவர்களுக்குத் தேர்தல் மேலாண்மைப் பணிக்காகச் சீட் வழங்கப்படவில்லை எனத் தலைமை சமாதானம் சொன்னாலும், அவர்கள் மனதளவில் சோர்ந்து போயுள்ளனராம்..
கடந்த 5 வருஷங்களாக கட்சிக்காக பல கோடி ரூபாய் செலவு செய்து, களத்தில் ஒவ்வொரு நாளும் வேலை பார்த்தும் கடைசியில் தேர்தலில் நிற்க வாய்ப்பு தராதது அவர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நிர்வாகிகள் வரிசையாகக் கட்சியிலிருந்து விலகி வருவது தலைமைக்கு மிகப்பெரிய நெருக்கடியை தந்திருப்பதாக தெரிகிறது..
நிழல் யுத்தம்
இவர்கள் தேர்தல் செலவுகளைக் கவனிக்கவோ அல்லது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கவோ முன்வராதது, அந்த 50 தொகுதிகளில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் ஒருவித மந்தநிலையை உருவாக்கியுள்ளதாக செய்திகள் கசிகின்றன..
இந்நிலையில்தான், ஒரு கட்சியின் அச்சாணியாக விளங்கும் மாவட்ட செயலாளர்களே தேர்தல் பணிகளைப் புறக்கணிப்பது என்பது அதிமுக பெரிய ஆபத்தாகவே முடியும் என்று அரசியல் நிபுணர்கள் அலர்ட் செய்ய துவங்கி உள்ளனர்.
அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் காட்டும் மவுனம், தேர்தலுக்கு முந்தைய "உள்ளடி" வேலைகளுக்கு வழிவகுக்கும் என்றும், கட்சித் தலைமை உடனடியாக இவர்களை நேரில் அழைத்து உரிய அங்கீகாரம் வழங்குவதாக உறுதி அளிக்காவிட்டால், இந்த 50 தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதால், எடப்பாடி இதில் உடனே கவனம் செலுத்த வேண்டும என்றும் அக்கறையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications