வெறும் 7 நிமிடம் தான்.. முடிந்துபோன டிக்கெட் முன்பதிவு.. பொங்கல் சிறப்பு ரயிலுக்கு போட்டா போட்டி
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்ல உள்ளனர். இதற்காக பொங்கலுக்காக இருமார்க்கமாக 5 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வெறும் 7 நிமிடத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டன.
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற இடங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகளவில் சொந்த ஊர் திரும்ப உள்ளனர்.
இதற்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் ஆண்டுதோறும் இயக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஜோடி சிறப்பு ரயில்
அதன்படி மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரம்-நெல்லை (06021), நெல்லை - சென்னை எழும்பூர் (06022), தாம்பரம்-நாகர்கோவில் (06041), நாகர்கோவில் -தாம்பரம் (06042), இருமார்க்கமாக கொச்சுவேலி -தாம்பரம் (060044/06043), எர்ணாகுளம் -டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் (06046/06045), தாம்பரம்-திருநெல்வேலி (06057/06058) என மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்
அதன்படி தாம்பரம் -திருநெல்வேலி (06021) சிறப்பு ரயில் ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மாறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கமாக ஜனவரி 13ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில்
மேலும் தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06041) ஜனவரி 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். அதன்பிறகு நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06042) மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

சிறப்பு கட்டண ரயில்
மேலும் தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06057) ஜனவரி 16ம் தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மறுமார்க்கமாக ஜனவரி 17 ல் திருநெல்வேலியில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்
எர்ணாகுளம் -டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06046) ஜனவரி 12ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து நள்ளிரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில் (06046) ஜனவரி 13ம் தேதி மதியம் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடைய உள்ளது.

கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில்
கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் (06044) ஜனவரி 17 ம் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக ஜனவரி 18 ல் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06043) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

7 நிமிடத்தில் முடிந்த டிக்கெட் பதிவு
இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து பலரும் போட்டிப்போட்டு கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் வெறும் 7 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications