சரியாக மோடி சென்னையில் இருக்கும்போது.. ஓபிஎஸ் கொடுத்த முதல்பக்க பேப்பர் விளம்பரம்.. இதுதான் மேட்டரா!
சென்னை : பிரதமர் மோடி சென்னை வருகை தந்த நிலையில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி ஓ.பன்னீர்செல்வம் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடி மற்றும் ராமர், சீதா லட்சுமணன் படங்களுடன் ஆங்கில நாளிதழில் விளம்பரம் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அகமதாபாத் திரும்பிய அவரை ஓ.பன்னீர்செல்வம் வழி அனுப்பி வைத்தார்.
அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்திக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-ன் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

பிரதம்ர் மோடி
இதனை அடுத்து சென்னை வந்த பிரதமரை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்துக்கு தனித்தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தனிப்பட்ட முறையில் இருவரையும் பிரதமர் ஒன்றாக சந்திக்கவில்லை. அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தபோது சென்னை விமான நிலையத்திலேயே மாளிகை எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை வரவேற்றார். தொடர்ந்து ராஜ் பவனில் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்த நிலையில் மீண்டும் அகமதாபாத் திரும்பும் வழியில் ஓ பன்னீர்செல்வத்தினை பிரதமர் சந்தித்தார் இந்த சந்திப்பு மிகச் சில நிமிடங்களை நடந்தது.

அதிமுகவில் முக்கியத்துவம்
செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தாலும் அவரது வருகை அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல்களுக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.கடந்த முறை அணிகள் பிளவு பட்டபோதும் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் நரேந்திர மோடி தான் இணைத்து வைத்தார் என்று கூறப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் தற்போது சென்னை வந்த பிரதமர் மோடியை சந்தித்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருந்தனர். ஆனால் ஒன்றாக இந்தச் சந்திப்பு நடக்காத நிலையில் தனித்தனியே இருவரையும் பிரதமர் சந்தித்தார். இதனால் அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை ஒன்றாக இணைத்து வைக்கும் மந்திர கோல் பிரதமர் நரேந்திர மோடி இடம் தான் இருப்பதாக அதிமுகவினரே கூறி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் தான் அதிமுகவில் ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம் என்பதனையும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது தனக்கு மரியாதை உள்ளது என்பதனை விளக்கும் வகையிலும் வழக்கமான அரசியல் ஆயுதம் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதாவது இன்று வெளியான ஆங்கில நாளிதழ்களில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி ஓ பன்னீர்செல்வம் என செய்தி வடிவில் முழு பக்க விளம்பரங்கள் அளிக்கப்பட்டிருந்தது.

விளம்பரம்
ஜெயலலிதாவுடன் ஓ பன்னீர்செல்வம் அமர்ந்து பேசுவது போலவும், ராமர் லட்சுமணர் சீதை படங்களுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் இருப்பது உள்ளிட்ட படங்களோடு வெளியாகி உள்ள இந்த விளம்பரத்தில் ஓபிஎஸ் குறித்து கடந்த காலங்களில் ஜெயலலிதா கூறியது மற்றும் அதிமுகவில் அவரது அரசியல் பயணம் குறித்து விரைவாக விளக்க வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில நாளிதழ்கள் தான் வாசிப்பார் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் இந்த யுக்தியை கையாண்டு இருக்கிறார் எனவும் அது ஓரளவுக்கு வெற்றி அடைந்திருக்கிறது என்கின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications