நீதிமன்றத்தை அவமதிப்பதாக புகார்... “வாய்தா” திரைப்படத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை: இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'வாய்தா' என்ற திரைப்படத்தில் நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
அறிமுக இயக்குநர் மகி வர்மன் இயக்கியுள்ள "வாய்தா" என்ற திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ளார்.

20 சர்வதேச விருதுகள்
கதாநாயகியாக ஜெசிகா நடிக்கும் இப்படத்தில் கே.டி. கருப்புதுரை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்த மு.ராமசாமி, நக்கலைட்ஸ் புகழ் பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 20-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளது.

அரசியல் தலைவர்கள் பாராட்டு
இதன் சிறப்புக் காட்சிகளை அண்மையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் சி.மகேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் அண்மையில் பார்வையிட்டு வாழ்த்தினர்.

வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையிலும், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் மனம் புண்படும் வகையிலும் இருப்பதாக வழக்கறிஞர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. பணக்காரர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்றும் ஏழைகளுக்கு உரிய நீதி கிடைக்காது எனவும் பொருள்படும்படி படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

போராட்டம்
இந்த நிலையில் படக்குழுவை கண்டித்து வழக்கறிஞர்கள் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். மேலும் தணிக்கை சங்கத்தினருடன் ஆலோசித்த பின்னர் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications