ஃபெடரருக்காக கண் கலங்கிய நடால்.. #Fedal இணையத்தை கலக்கும் மீம்ஸ்!
சென்னை: நட்சத்திர டென்னிஸ் வீரர் ஃபெடரரின் கடைசி போட்டியில் நடால் கண்கலங்கி அழுதது பற்றி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வித்தியாச வித்தியாசமான மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

டென்னிஸ் விளையாட்டின் முடிசூடா மன்னன் கடைசி போட்டியில் விளையாடி கண்ணீருடன் விடைபெற்றுவிட்டார். 41 வயதில் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் விளையாட்டிற்கு முழுக்கு போட்டுவிட்டார். வழக்கம்போல் ஜாம்பவான்கள் முதல் இளைஞர்கள் வரை அவருக்காக பதிவுகளையும், புகைப்படங்களையும் பகிர்ந்து சோக கீதங்களை வாசித்து வருகின்றனர்.
டென்னிஸ் ஜாம்பவான் பீட் சாம்பராஸை வீழ்த்திவிட்டு கண்ணீர் விட்ட ரோஜர் ஃபெடரர், எந்த சமூக வலைதளத்தில் திறந்தாலும் ரோஜர் ஃபெடரரின் கண்ணீர் புகைப்படங்கள் தான் கண்முன் வந்து நிற்கின்றன. எந்த விளையாட்டு வீரர் ஓய்வை அறிவித்தாலும், இதுபோல் இருப்பது வழக்கமானது தான். ஆனால் இம்முறை ரோஜர் ஃபெடரர் பற்றி பேசுவதைவிடவும், நடால் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.

காரணம் தன் வாழ்நாள் முழுக்க யாரை எதிர்த்து விளையாடி தோல்விகளையும், வெற்றிகளையும் பெற்றாரோ அவருக்காக கண்ணீர் விட்டதுதான் இங்கே அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு வீரருக்கும் இப்படி ஒரு எதிராளி அமைவதெல்லாம் அவ்வளவு சாதாரணமல்ல. போட்டி என்று வந்துவிட்டால் கடைசி வரை போராடவும், விமர்சனம் என்று வந்துவிட்டால் அவருக்கு முன்பாக எதிர்த்து கேட்பதும் நடாலால் மட்டுமே சாத்தியமான ஒன்று.
இதுதான் விராட் கோலி முதல் ரொனால்டோ வரை அனைவரையும் ஈர்த்துள்ளது. அதேபோல் நண்பன் ஒரு வந்தபிறகு என்று பிரண்ட்ஷிப் பாடல்களை அவர்களின் புகைப்படங்களுக்கு பதிவிட்டு மீம்களாக மாற்றி நம்ம ஊர் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ, அழுகையை கட்டுப்படுத்த முடியாத ஆண்கள் அழகானவர்கள் என்றும், ஆண்களுக்கு அழுகை வரும் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்னும் சிலர் இரு வீரர்களுக்கு இடையிலான ரசிகர்களுக்கு இடையே நிலவும் சண்டைகள், சர்ச்சைகளை வைத்து அறிவுரை மீம்களை வெளியிட்டு வருகிறார்கள். இது ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக தொடங்க, #Fedal என்று ஃபெடரர், நடால் இருவரின் புகைப்படங்கள் பதிவிட்டு பலரும் தங்களது நெகிழ்ச்சியை வெளிய்ப்படுத்தி வருகின்றனர். இந்த மீம்கள் அனைத்தும் நகைச்சுவை, நெகிழ்ச்சி, அறிவுரை என்று பல்வேறு தளத்தில் அமைந்திருப்பது பார்வையாளர்கள் கவர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications