‛காவி டீசர்ட்டில் எல் முருகன்’.. அந்த வாசகத்தை கொஞ்சம் பாருங்க.. மோடி மீதான நம்பிக்கையை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மத்திய இணையமைச்சர் எல் முருகன் ‛நமோ ஹாட்ரிக்' என பிரிண்ட் செய்யப்பட்ட காவி நிற டீசர்ட் அணிந்து போட்டோ வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரைவில் மத்திய இணையமைச்சராக இருப்பவர் எல் முருகன். இவர் மீன்வளம், கால்நடை துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை சார்ந்த மத்திய இணையமைச்சராக உள்ளார். தமிழக பாஜகவின் தலைவராக இருந்த இவர் ராஜ்யசபா எம்பியாகி மத்திய இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

Ahead of loksabha election Union Minister L Murugan wears ‛Namo Hatrick’ Hoodie and released photo

இந்நிலையில் தான் அவரது ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் எல் முருகன் நீலகிரி தொகுதியில் திமுக எம்பி ஆ ராசாவை எதிர்த்து களமிறங்குவார் என கூறப்பட்டது. மேலும் எல் முருகனும் அந்த தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கினார். இத்தகைய சூழலில் தான் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வாக இருக்கிறார். இதன்மூலம் அவர் நீலகிரி தொகுதியில் போட்டியிடமாட்டார் என கூறப்படுகிறது.

Ahead of loksabha election Union Minister L Murugan wears ‛Namo Hatrick’ Hoodie and released photo

இத்தகைய சூழலில் தான் எல் முருகன் தற்போது வெளியிட்டுள்ள போட்டோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது வேஷ்டியுடன் காவி நிற ஹுடி வகை டீசர்ட்டை எல் முருகன் அணிந்துள்ளார். அதில் ‛நமோ ஹாட்ரிக்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்பது தான் இதன் அர்த்தமாகும்.

நரேந்திர மோடியை ‛நமோ' என பாஜகவினர் சுருக்கி கூறி வருகின்றனர். கடந்த 2014, 2019 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பாஜக அமோக வெற்றி பெற்றது. தற்போது 2வது முறையாக மோடி பிரதமராக இருந்து வருகிறார். இத்தகைய சூழலில் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். பிரதமராக மோடி 3வது (ஹாட்ரிக்) முறையாக பொறுப்பேற்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் எல் முருகன் இந்த டீசர்ட் அணிந்துள்ளார்.

முன்னதாக கடந்த 10ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் இதேபோன்ற டீசர்ட்டை நாடாளுமன்றத்துக்கு அணிந்து சென்று கவனம் ஈர்த்தார். அந்த வரிசையில் எல் முருகன் தற்போது இத்தகைய டீசர்ட் அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+