Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியாக தேர்தலுக்கு முன்.. ஃபைல்களை தூசி தட்டும் டெல்லி.. திமுக தலைகளை சுத்து போடும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக அமைச்சர்கள், டாப் தலைகளுக்கு எதிரான வழக்குகள் தீவிரம் அடைந்து வருகின்றன.

2011-ஆம் ஆண்டு கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதித் தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, திடீரென உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அப்போது மனுதாரர் தரப்பின் குளறுபடிகளையும் காலதாமதத்தையும் கண்டு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதில் சைதை துரைசாமியிடம் கடுமையான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ளது.

tamil nadu assembly elections 2026 MK Stalin Saidai Duraisamy K N Nehru

நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:

நீதிபதிகளின் சரமாரி கேள்விகள்

விசாரணையின் தொடக்கத்தில், சைதை துரைசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர்.

முரணான ஆதாரங்கள்: "நீங்கள் தாக்கல் செய்துள்ள ஆதாரங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. இதில் எந்தத் தெளிவும் இல்லை" என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கால அவகாசத்திற்கு மறுப்பு: கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று சைதை துரைசாமி தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதைக் கேட்டு ஆவேசமடைந்த நீதிபதிகள், "கடந்த 2 மாதங்களாகச் செய்யாத வேலையை ஒரே நாளில் முடித்துவிடுவீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.

வழக்கின் பின்னணி

2011 தேர்தலில் அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின், 'திருமங்கலம் பார்முலா'வைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியதாக சைதை துரைசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சிடிக்கள் (CDs) ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்திய சாட்சியச் சட்டம், 1872-ன் படி, ஒரு கணினி, மொபைல் அல்லது கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை (வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள், சிடிக்கள்) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது, அவற்றுடன் ஒரு உறுதிமொழிச் சான்றிதழ் (Certificate) இணைக்கப்பட வேண்டும். இதுவே 65B சான்றிதழ் எனப்படுகிறது.

அந்த டிஜிட்டல் ஆதாரம் போலியானது அல்ல (No Tampering) என்பதையும், அது எடுக்கப்பட்ட சாதனம் (Device) சரியாக வேலை செய்தது என்பதையும் உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.

ஸ்டாலினுக்கு எதிரானதா?

இருப்பினும், மேற்கண்ட ஆதாரங்கள் 'இந்திய சாட்சியச் சட்டத்தின் 65B' பிரிவின் கீழ் முறையாகச் சான்றளிக்கப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் 2017-ல் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்தே தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சைதை துரைசாமி சமர்ப்பித்த சிடிக்களில் இந்த 65B சான்றிதழ் இல்லாததால்தான் சென்னை உயர் நீதிமன்றம் அவற்றை ஆதாரமாக ஏற்க மறுத்தது. இப்போது உச்ச நீதிமன்றம், இந்தத் தொழில்நுட்பக் காரணத்தைத் தாண்டி அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயலாமா என்று உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில்.. விரைவில் இதில் எப்படிப்பட்ட தீர்ப்பும் வரலாம். ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு என்பதால்.. டெல்லி தரப்பில் இந்த வழக்கு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

கே.என் நேரு வழக்கு

இன்னொரு பக்கம் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான வேலைக்கு லஞ்சம் புகார் தொடர்பாக, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) சென்னை உயர்நீதிமன்றம் இன்று (உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, கடந்த 2025 அக்டோபர் 27 அன்று அமலாக்கத்துறை (ED) பல்வேறு புகார்களை தமிழக டிஜிபியிடம் வழங்கியது. இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்புகள்

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை வழங்கியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஒரு குற்றவியல் வழக்கைப் பதிவு செய்ய போதுமானதாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

தாமதம் ஏன்?: அமலாக்கத்துறை ஆதாரங்களை வழங்கி பல மாதங்கள் ஆகியும், இன்னும் 'விரிவான விசாரணை' (Detailed Inquiry) என்ற பெயரில் காலதாமதம் செய்வது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உடனடி நடவடிக்கை: வெறும் முதற்கட்ட விசாரணை என்பது மட்டும் போதாது என்றும், ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசுத் தரப்பு வாதம்

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர்: லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி 180 நாட்கள் விசாரணை நடத்த அவகாசம் உள்ளதாகத் தெரிவித்தனர். ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17ஏ பிரிவின்கீழ் அனுமதி பெறப்பட்டு, டிசம்பர் 15 முதல் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக வாதிட்டனர்.

இருப்பினும், அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ரமேஷ், தாங்கள் வழங்கியது வெறும் தகவல் அல்ல, அவை மிக முக்கியமான "ஆதாரங்கள்" என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே வழக்குப்பதிவு செய்வது அவசியமானது என்று தீர்ப்பளித்தது.

இன்னும் சில அமைச்சர்கள்

இது போக இன்னும் சில அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள், டாப் தலைகளுக்கு எதிரான வழக்குகளையும் கையில் எடுக்க டெல்லி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான காய் நகர்த்தலை டெல்லி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+