தலைநகரத்தில் கை வைத்த ஓபிஎஸ்! எடப்பாடியிடம் இருந்து எஸ்கேப்பாகும் 4 மா.செ.க்கள்? மெகா ப்ளான் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து கடந்த சில நாட்களாக நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் இருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சிலர் என ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் அணிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் தற்போதைக்கு யாருக்குமே நேரம் சரியில்லை என்று தான் கூற வேண்டும். எந்த அளவுக்கு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார்களோ, அவர்கள் அதே கட்சியில் அதளபாதளத்தில் வீழ்ந்துள்ளார்கள் என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என பலரும் அதிகாரத்தின் உச்சம் வரை சென்று அதிமுகவினராலேயே ஓரம்கட்டப்பட்டு, தற்போது மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற பல்வேறு போராட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி மட்டும் இதில் விதிவிலக்கு.

சசிகலா

சசிகலா

சசிகலாவால் கொண்டுவரப்பட்ட டிடிவி தினகரன், ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக தலைமை பொறுப்பில் அமர நினைத்த சசிகலா, ஜெயலலிதாவுக்கு பின்னர் முதல்வராகவும் பொருளாளர் ஆகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவினராலேயே பல காலகட்டங்களில் வெளியேற்றப்பட்டு தற்போது மீண்டும் அதிமுகவில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்த கடுமையாக போராடி வருகின்றனர். அந்த நிலைமை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

காரணம் அதிமுகவின் தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் இருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார ஆசைக்கு இடைஞ்சலாக இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். மூன்று முறை முதல்வர் 15 ஆண்டுகளுக்கு மேலாக பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வைத்து வரும் அவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் செயல்பட முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் இரட்டை தலைமை வேண்டுமானால் தொடரட்டும் என கூறுகிறார்.

ஒற்றைத் தலைமை

ஒற்றைத் தலைமை

ஆனால் ஒற்றைத் தலைமையாக தான் நான் இருப்பேன் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் காரணமாக அதிமுகவில் கடந்த மூன்று மாத காலமாக சூறாவளியே வீசி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில் வியாழக்கிழமை விசாரணையின் போது வரும் உத்தரவை பொருத்தத்தை அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் அதே நேரத்தில் கிடைக்கிற இடைவெளியில் தனக்கான ஆதரவை பெருக்கிக் கொள்ள திட்டமிட்டிருக்கும் ஓ பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தனது ஆதரவாளர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை தனது பக்கம் இருக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

 ஓரளவு வெற்றி

ஓரளவு வெற்றி

அதில் பெருமளவு வெற்றி கிடைக்காவிட்டாலும் ஓரளவு வெற்றி கிடைத்து இருக்கிறது என்றே சொல்லலாம். காரணம் மாவட்ட செயலாளர்கள் மாநில அளவிலான நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் வராமல் விட்டாலும் ஒன்றிய செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் அவருக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் சேலம் ராமநாதபுரம் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அணி தாவும் நிர்வாகிகள்

அணி தாவும் நிர்வாகிகள்

ஆனால் சென்னையில் இருக்கும் நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெருமளவில் நெருக்கடி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் ஒரு மாவட்ட செயலாளர், சார்பு அணி நிர்வாகிகளான இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட அவற்றின் மாவட்ட நிர்வாகிகள், வட்ட அளவிலான நிர்வாகிகள் ஓபிஎஸ் தரப்புக்கு வருவார்கள் எனக் கூறப்படுகிறது, இதற்கான பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் விரைவில் அணிகள் சந்திப்பு இருக்கும் என்கின்றனர் சென்னை அதிமுகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+