அடுத்த பொதுக்குழுவில் சசிகலாவா? கூட்டிட்டு போவாரா ஓபிஎஸ்! ஒரே தமாசா இருக்கும்! தெறிக்கவிடும் மீம்ஸ்!
சென்னை : அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில் இவ்விவகாரம் சூடுபிடித்துள்ளது ஒருபுறம் இருந்தாலும், எது கிடைத்தாலும் மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் லட்டு போல கிடைத்த இந்த கண்டெண்டை விடுவார்களா என்ன? தற்போது சமூக வலைதளங்களில் தெறிக்கவிடும் அதிமுக மீம்ஸ்கள் குறித்து இப்போது பார்க்கலாம்..
இங்கு பகிரப்படும் மீம்ஸ்கள் அனைத்தும் என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல, எங்கிருந்தோ எனக்கு கிடைக்கும் மீம்ஸ்களை, பிறரும் பார்த்து மகிழ நான் இங்கு பகிர்கிறேன் என முதலிலேயே குறிப்பிட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர்.
"அடுத்த மாச பொதுக்குழுவுக்கு OPS சின்னம்மா சசிகலாவ கூட்டிட்டு வரப்போறாருனு சொல்லிவை .... ஒரே தமாசா இருக்கும் ...." என சார்பட்டா பரம்பரை படத்தின் டெம்பிளேட்டை வைத்து மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

"ஓபிஎஸ்- நான் தான் தலைமை..
இபிஎஸ் - நான் தான் தலைமை
சிவி சண்முகம் - தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிப்பு" அல்டிமேட்டான இந்த மீம் காங் VS காட்ஸில்லா டெம்பிளேட்டை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னைக்கு பொதுக்குழுவை ஏன் கூட்டுனீங்க..
தீர்மானம் நிராகரிக்க
சரி 11ஆம் தேதி பொதுக்குழுவை ஏன் கூட்டுறீங்க..
ஆங்.. இன்னைக்கு நிராகரித்த தீர்மானத்தை நிறைவேற்றத்தான்" என அதிமுக அடுத்த பொதுக்குழுவை கலாய்த்து வைகைப்புயலாரை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த மீம்

தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் ஆவேசமாகிய நிலையில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு ... ~அப்றம் ஏன் தேவையில்லாம யூ டர்ன் போட்டு , டேபிள நொறுக்கி கூட்ட நெரிசலில் காரில் வந்து இந்த மீட்டிங்கு ..." என எவர் கிரீன் ஏட்டு ஏகாம்பரம் கேட்கிறார்.

பல லட்சம் செலவு செய்து கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மான பர்னிச்சர்களும் உடைக்கப்பட்டுள்ள நிலையில், "அடிச்சு புடிச்சு பொதுக்குழுவ நடத்தியே தீரணும்னு கூட்டி அதே பொதுக்குழுவ நிராகரிப்பாங்களா ... ? ஆனா நாங்க நிராகரிப்போம்..!" என வசூல் ராஜா மீம் தான் அதிமாக பரவி வருகிறது.

-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications