சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சக்ஸஸ்" எடப்பாடிக்கே.. அதிமுக அலுவலக சாவி வழக்கு.. ஓபிஎஸ் மனு டிஸ்மிஸ்.. நீதிபதி கேட்ட "அந்த" கேள்வி

அதிமுக அலுவலக சாவி தொடர்பாக விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடக்கிறது

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என்று சொல்ல இயலாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ளது.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை கழட்டிவிட்டுவிட்டு, தனியாக பொதுக்குழுவை நடத்தி அதிரடிகளை மேற்கொண்டார்..

பின்னர் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது..

சசிகலாவா? ஓபிஎஸ்க்கு ஜெர்க் கொடுக்கும் எடப்பாடி! தயாரான பட்டியல்..! தூண்டிலில் சிக்கிய மா.செ.க்கள்! சசிகலாவா? ஓபிஎஸ்க்கு ஜெர்க் கொடுக்கும் எடப்பாடி! தயாரான பட்டியல்..! தூண்டிலில் சிக்கிய மா.செ.க்கள்!

 ரத்தக்கண்ணீர்

ரத்தக்கண்ணீர்

மிகப்பெரிய அது கலவரமாக வெடித்தது.. பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.. அதிமுக அலுவலகம், அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது.. அங்கிருந்த பொருட்களும் கொள்ளை போனது... இதையெல்லாம் கண்ணெதிரே பார்த்து ரத்தத்தின் ரத்தங்கள் ரத்தக்கண்ணீர் வடித்தனர்.. இதைத்தொடர்ந்து அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது... இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

 ஆபீஸ் சாவி

ஆபீஸ் சாவி

இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20-ந் தேதி நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்... அதன்படி, சாவி ஒப்படைக்கப்பட்டு, இப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே அந்த அலுவலகம் இருக்கிறது.. இதை எதிர்த்து ஓபிஎஸ், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடினார்.. அப்பீலும் செய்தார். கடந்த மாதம் 4-ந்தேதி இது தொடர்பான மனுவை ஓபிஎஸ் தரப்பு வக்கீல்களும் தாக்கல் செய்தனர்..

 கீ யாரிடம்?

கீ யாரிடம்?

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. ஹைகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 தெறிக்கும் வாதம்

தெறிக்கும் வாதம்

இந்த நிலையில் 3 வார இடைவெளிக்கு பிறகு அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் இன்று அதாவது 12ம் தேதி நடக்க உள்ளதாக கூறப்பட்டது.. உரிய விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கடந்த முறையே சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.. அதனால், இன்றைய தினம், அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், இதனால் எடப்பாடி & ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைப்பார்கள் என்றும் கூறப்பட்டது.

 ம்ஹூம்... கூடாது

ம்ஹூம்... கூடாது

இதனிடையே, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.. பண விவகாரங்களில் ஓபிஎஸ் கையாடல் செய்துள்ளதால் அவரிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கக் கூடாது, அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத போது சாவியை ஒப்படைக்க உரிமை கோர முடியாது என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்ததால், இன்றைய விசாரணையின்போது வருவாய் துறை அதிகாரிகளும் பதில் அளிப்பார்கள் என்றும் நம்பப்பட்டது.

 வாதம்

வாதம்

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியதை எதிர்க்கும் ஓபிஎஸ் வழக்கின் விசாரணை, இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியதுது. ஓபிஎஸ் அதிமுக உறுப்பினரே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி பதில்மனு தாக்கல் செய்த நிலையில் சுப்ரீம்கோர்ட் இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை துவங்கியதுமே ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன..

நீதிபதிகள்

நீதிபதிகள்

அதன்படி, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறு என்றும், அதிமுக அலுவலகத்திற்கு செல்ல ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உரிமை உண்டு என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது... அதற்கு நீதிபதிகள் ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.. தொடர்ந்து, இந்த விஷயத்தில் ஏதாவது பொது அமைதி கெட்டுள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 அண்டைவீட்டுக்காரர்கள்

அண்டைவீட்டுக்காரர்கள்

இதற்கு மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டை என்பது அண்டை வீட்டுக்காரர்களின் இடையேயான பிரச்சனையல்ல என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்... தனிநபர்கள் போன்று இருவரும் அடித்துக் கொள்வதா? என்றும் நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.. இறுதியில், அதிமுக அலுவலக சாவி வழக்கில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.. மேலும் சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என்று சொல்ல இயலாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

English summary
AIADMK KEY: OPS case filed seeking handover of AIADMK office keys and appeal petition hearing today in SC அதிமுக அலுவலக சாவி தொடர்பாக விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடக்கிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X