அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..இபிஎஸ் தலைமை..ஆலோசித்தது என்ன?
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அதன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற போதே ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் கலவரம் வெடித்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வான பின்னர், அவர் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் முதல் எம்.எல்.ஏக்கள் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக சட்டசபைக் கூட்டம் நடக்கும் முன்பாக, தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடக்கும். மாவட்ட செயலாளர்களை இணைத்து தற்போது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒற்றைத்தலைமை பிரச்சனை உச்சக்கட்ட மோதலில் உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் நாளுக்கு ஒரு பேட்டி அளித்து வரும் நிலையில் இன்றைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் , எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியது.

சட்டசபை கூடுகிறது
அக்டோபர் 17ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் கூடியது.

சபாநாயகர் மவுனம்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரும், துணை கொறடா பதவியிலிருந்து மனோஜ் பாண்டியனை நீக்கிவிட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை சபாநாயகர் அப்பாவு ஒப்புக்கொள்ளவில்லை.

சட்டசபையில் சமாளிப்பது எப்படி
ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் முடிவை சபாநாயகர் எதிர்பார்த்து, ஓ.பன்னீர் செல்வத்தை பதவியில் இருந்து நீக்காமல் இருக்கும்பட்சத்தில், ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் சட்டசபைக்கு வந்தால் அவரை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

அதிமுக பொன்விழா
அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள். இதற்காக மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலோசித்தது என்ன?
ஆலோசனை கூட்டத்திற்கு வரும் அனைத்து எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கோரிக்கையை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடிய போது ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த போது ஏற்பட்ட கலவரத்தை யாராலும் மறக்க முடியாது என்பதால் இன்றைய தினம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ராயப்பேட்டை ரணகளமாகுமா
ஆலோசனை கூட்டத்திற்கு வரும் அனைத்து எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் கோரிக்கையை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடிய போது ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த போது ஏற்பட்ட கலவரத்தை யாராலும் மறக்க முடியாது. இன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications