பஞ்சாயத்தே வேணாம்! முதல்வர் கூட்டத்தில் ஆப்சென்டான ரவீந்திர நாத்! பழசு கண்ணு முன்னாடி வந்து போகும்ல!
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட நிலையில், அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை எம்பியும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓபி ரவீந்திரநாத் குமார் கலந்து கொள்ளவில்லை.
சென்னையில் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின், துணைத் தலைவராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பனும் உள்ளனர்.

ஆய்வுக் கூட்டம்
இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், தேசிய நலவாழ்வு குழுமம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பேசிய முதல்வர் இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை விரைவுபடுத்தி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஓபி ரவீந்திரநாத் குமார்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்த கூட்டத்தில் திமுக எம்பிகள், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை எம்பியும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓபி ரவீந்திரநாத் குமார் கலந்து கொள்ளவில்லை. கடந்த மே மாதம் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இந்த முறை ஏன் கலந்து கொள்ளவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

என்ன காரணம்?
இந்நிலையில் இன்று அவர் கலந்து கொள்ளாததற்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களாக இருக்கும் டி ஆர் பாலு, ஆர் எஸ் பாரதி, திருமாவளவன், ஓ பி ரவீந்திரநாத் குமார், அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பிறகு அதில் பங்கேற்ற ரவீந்திரநாத் குமார் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பாரதியார் கவிதைகள் நூலை பரிசாக வழங்கினார்.

முதல்வருடன் சந்திப்பு
மேலும் சில கோரிக்கைகள் தொடர்பாக மனு ஒன்றையும் அளித்தார். முதல்வர் ஸ்டாலினை ஒபி ரவீந்திரநாத் குமார் நேரில் சந்தித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைக் காரணமாக வைத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தது. திமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாகவும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியது, அவரது மகனான ஓபி ரவீந்திரநாத் குமார் முதல்வரை நேரில் சந்தித்தது உள்ளிட்ட காரணங்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அஸ்திரங்களாக பயன்படுத்தப்பட்டது.

சிக்கல் கூடாது
இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும் என பாஜக தலைமை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது கூட்டத்தில் ஓபி ரவீந்திரநாத் குமார் பங்கேற்று ஏதாவது பேசி சிக்கலாகி விடக்கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பு கருதியதாகவும் அதன் காரணமாகவே ரவீந்திரநாத் குமார் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறுகின்றனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications