பொங்கல் பரிசில் கரும்பு.. அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி.. ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் திருவண்ணாமலையில் அதிமுக விவசாய அணி சார்பில் ஜன.2ல் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு கரும்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட வேண்டும் என்று அதிமுகவினர் கடுமையாக வலியுறுத்தினர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்கமாக ரூ. 5,000 வழங்கவேண்டும் எனவும், முழு செங்கரும்பை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்த நிலையில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்கு பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு ஒன்றையும் சேர்த்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதிமுகவின் வெற்றி
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி ஆகும்.அதிமுக விவசாய அணி சார்பாக ஜன.2ம் தேதியன்று திருவண்ணாமலையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது.

அதிமுக துணை நிற்கும்
இனி வரும் காலங்களில் திமுக அரசு மக்கள் நலனிலும், விவசாயிகள் நலனிலும் அக்கறை இல்லாமல் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் போது மக்களுக்கு ஆதரவாக அதிமுக என்றென்றும் துணை நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிமுகவினருக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications