எப்படிங்க கொடுக்க முடியும்? அந்த 3 பேரை அடியோடு ஓரம்கட்டிய அதிமுக.. சசிகலாவிற்கு தரப்பட்ட மெசேஜ்!
சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.. இதில் சசிகலாவிற்கும் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் முக்கியமான மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டணி பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து.. தேமுதிக கூட்டணியில் இருந்து வெளியேறியதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதிமுக அதிரடியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. துரிதமான செயல்பட்டு நேற்றே அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது.
இதுவரை அதிமுக சார்பாக 177 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. பாமக சார்பாக 19 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இல்லை
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலில் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு நெருக்கமாக இருக்கும் உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரின் குட் புக்கில் இருக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலர் மட்டும் தொகுதி மாற்றி நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொகுதி
மற்றபடி ஆட்சிக்கு எதிராக இருப்பார்கள், எதிர்காலத்தில் அணி மாற வாய்ப்புள்ளது, வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்ட யாருக்கும் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆட்சியில் உட்கார்ந்தால் நிலையாக இருக்க வேண்டும் என்பதால் நம்பகமான நிர்வாகிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு
இதனால்தான் அதிமுகவில் 41 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் அதிமுகவில் இருந்து கொண்டே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து பின் மீண்டும் அதிமுகவில் இணைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கள்ளக்குறிச்சி - பிரபு, பெருந்துறை - தோப்பு வெங்கடாச்சலம், அறந்தாங்கி - ரத்தின சபாபதி ஆகிய மூன்று பேர்தான் இவர்கள்.

முடியாதது
இவர்கள் மூன்று பேருக்குமே இந்த முறை அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்கள் மீது அதிமுக தலைமை பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதால் இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்கிறார்கள். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியதில்.. அவங்களுக்கு எப்படிங்க வாய்ப்பு கொடுக்க முடியும்.

ஆட்சிக்கு வந்து
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் அணி மாற மாட்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும். அதனால்தான் கொடுக்கவில்லை. கட்சிக்கு கட்டுப்படுபவர்கள்தான் தேவை, என்று கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் சசிகலா மீண்டும் அதிமுக பக்கம் வரவே முடியாது என்பதற்கான சிக்னல்தான் இது என்றும் கூறுகிறார்கள்.

ஏற்கவில்லை
தினகரனுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர்களையே அதிமுக தலைமை ஏற்கவில்லை. அப்படி இருக்கும் போது சசிகலாவை எப்படி ஏற்றுக்கொள்வார்கள். இந்த 3 பேர் புறக்கணிக்கப்பட்டதே அதற்கான கிளியர் சிக்னல்தான் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications