சாயம் வெளுத்தது! திமுக துண்டோடு ஓ.பன்னீர்செல்வம்! என்னங்க ‘அவங்க’ இப்படி சொல்லிட்டாங்க! பரபர அதிமுக!
சென்னை : அதிமுக அலுவலகத்தில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் திமுக கைக்கூலி எனவும், அவரது சாயம் வெளுத்து விட்டது என அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது அதிமுக மூத்த நிர்வாகிகளும் பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றனர்.
Recommended Video
அதிமுகவில் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக நீடித்துவந்த ஒற்றைத் தலைமை குறித்த விவகாரமானது, இறுதியாக இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மூலம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
பொதுக்குழு நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் காலை 9 மணியளவில் தீர்ப்பு வழங்கியதையடுத்து, வானகரத்தில் தொடங்கிய அதிமுக பொதுக்குழுவில், கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.

எடப்பாடி பழனிசாமி தேர்வு
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்ட திட்ட விதி பிரிவு-20, 7ன் படி கழக இடைக்கால பொதுச் செயலாளராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுத் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவின் சிறப்பு தீர்மானத்தின் மூலம், கட்சி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாக அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்பட்டார்.

கட்சியிலிருந்து நீக்கம்
வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர். கட்சியின் தொண்டர்கள் முழுவதும் தன் பக்கம் இருப்பதாக அவர் தொடர்ந்து கூறி வந்தாலும், சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிராகவே பதிவிட்டு வருகின்றனர்.

பகீர் புகார்
ஓபிஎஸ் முன்கூட்டியே திட்டமிட்டு தலைமை அலுவலகம் முக்கிய ஆவணங்கள் எடுத்து சென்ற பின்பு தான் அஇஅதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது எனவும், தமிழக முதல்வர் அவர்கள் ஓபிஎஸ் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஆவணங்களை ஓபிஎஸ் திருடி சென்றுவிட்டார் என பகீர் புகாரை கிளப்பியுள்ளார் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார்.

திமுக கைக்கூலி ஓபிஎஸ்
முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், என அனைவருமே மிகக் கடுமையாக ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்து பேசினர் குறிப்பாக திமுக எதிர்ப்பு என்ற அதிமுகவின் பிரதான கொள்கையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகி விட்டதாகவும், திமுகவினரை பாராட்டியதோடு திமுகவுடன் அவரது மகனும் இணக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டினர். இந்நிலையில் சாயம் வெளுத்தது திமுக கைக்கூலி ஓபிஎஸ் ரவுடிகளோடு சென்று தலைமை கழக அலுவலகத்தில் கொள்ளையடிப்பது தான் அம்மாவுக்கு காட்டும் விசுவாசமா என மிக கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களை பதிவிட்டு வருகின்றனர் அதிமுக எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள்.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications