பழைய பழனிசாமினு நினைச்சீங்களா? மேடையில் முழங்கிய எடப்பாடி! முரட்டுத்தனமாய் தூங்கிய முனுசாமி & கோ.!
சென்னை : ரத்தக் களரியான அதிமுக அலுவலகம், போர்க்களமான பொதுக்கூட்டம் என நேற்றைய தினம் அதிமுக வரலாற்றில் மறக்க முடியாத தினமாக அமைந்த நிலையில் என்னை பழைய பழனிச்சாமியின் நினைச்சீங்களா என மேடையில் எடப்பாடி பழனிச்சாமி கொந்தளித்துக் கொண்டிருக்க கே.பி.முனுசாமி ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தூங்கி வழிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக அதிமுகவில் நீருபூத்த நெருப்பாக இருந்த அதிகாரப்போட்டி ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் அதிமுகவுக்குள் நிறைவேற்றப்பட்ட அரசியல் நாடகத்தின் காட்சிகள் ஏராளம்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதிலிருந்து கட்சியில் அதிகாரமிக்கவர் யார் என்ற போட்டி ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே எழுந்தது.

அதிமுக பொதுக்குழு
இந்த காலத்தில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதன் விளைவுதான் எம்ஜிஆர் ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளுக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி இருப்பது ஏற்கனவே வேறு சிலரும் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வந்திருந்தாலும் மிகவும் அறியப்பட்ட முகங்களாக எம்ஜிஆர் ஜெயலலிதா தான் இருந்து வந்தனர். அதன் பிறகு சசிகலா சிறிது காலம் பணியாற்றினாலும் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஜெயலிதாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த ஓபிஎஸ் அதிமுகவின் மிகப்பெரிய பொறுப்புக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தொண்டர்களிடையே மோதல்
இருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.. தர்ம யுத்தத்தின் போது எடப்பாடி பழனிச்சாமியே எதிர்பார்க்காத அளவுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு அதிகமாக இருந்தது பின்னர் அவரது செயல்பாடுகள் காரணமாக அது சரிவடைந்து தற்போது ஐந்தே ஐந்து மாவட்ட செயலாளர்கள் ஆதரவில் வந்து நிற்கிறது. நேற்று நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று கொண்ட போதிலும் மறுபுறம் அதிமுகவின் அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஏராளமான ஆவணங்களை அள்ளி சென்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட போது மேடையில் மிகவும் ஆவேசமாக பேசினார் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் குறித்து அதிகமாக பேசாத நிலையில் தமிழக முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் என்னை பழைய பழனிச்சாமி என நினைத்தீர்களா என மிகவும் ஆவேசமாக பேசினார். அதிமுகவை அழிக்கலாம் என நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது என மிகவும் கொந்தளிப்புடன் பேசிக் கொண்டிருந்தார்.

முரட்டு தூக்கம்
இப்படி எடப்பாடி பழனிச்சாமி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்க மேடையில் அமைந்திருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தூங்கி வழிந்தனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களான கேபி முனுசாமி, ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், மேடையின் கீழே அமர்ந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்களும் முரட்டுத்தனமாய் தூங்கிக் கொண்டிருந்தனர். மேலும் கட்டுப்படுத்த முடியாமல் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தடபுடல் விருந்து வைக்கப்பட்ட நிலையில் அதன் காரணமாக யாரும் தூங்கவில்லை எனவும் நீண்ட நாட்களாக கட்சிக்காக கடுமையாக உழைத்ததால் அசதியில் தூங்கி இருக்கலாம் என்கின்றனர் அதிமுகவினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications