துரந்தர் ஸ்டைலில் திக் திருப்பம்.. சிவி சண்முகம், வேலுமணி மூவ்.. விஜய் மாஸ்டர்பிளான்! எடப்பாடி ஷாக்
சென்னை: தமிழக அரசியலில் இன்று காலை முதல் அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்கள், ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அபார வெற்றிக்குப் பிறகு, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட அதிமுகவின் ஆதரவைப் பெற திரைமறைவு வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இன்று காலை முதல் மதியம் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
காலை 8:00 - அதிமுகவில் வெடித்த பிளவு: சண்முகம் அதிரடி
அதிமுகவின் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகத்தை தவெக தரப்பு அணுகியதாகத் தகவல்கள் வெளியாகின. சில தொகுதிகளை மட்டுமே வைத்துள்ள கட்சிகளின் ஆதரவை கேட்பதை விட, நேரடியாக அதிமுகவின் ஆதரவை கேட்கலாம் என தீர்மானிக்கப்பட்டு சி.வி.சண்முகத்தை அணுகியுள்ளது தவெக!
எடப்பாடி பழனிச்சாமியை சமாளிக்க வல்லமை பெற்றவராகவும், தற்போது வன்னியர் சமூகத்தின் 15 எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றவராகவும் சி.வி.சண்முகம் இருப் பதால் அவரை அணுகியுள்ளனர். குறிப்பாக, எஸ்.பி.வேலுமணியிடம் பேசி வரும் செங்கோட்டையன், ஆதரவு குறித்து விரிவாக விவாதித்த போது, என்னிடம் ஓரிரு எம்.எல்.ஏ.க்கள்தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து நேரடியாக என்னால் அரசியல் செய்ய முடியாது. அதனால் சி.வி.சண்முகத்திற்குதான் அதிக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. அவரிடம் பேசுங்கள். நானும் பேசுகிறேன் என சொல்லியிருக்கிறார் வேலுமணி.
காலை 9:30 - ரகசிய மீட்டிங்
இதனையடுத்தே, சி.வி.சண்முகத்திடம் செங்கோட்டையனும், வேலுமணியும் பேசியுள்ளனர். அவர்களின் விவாதம், அதிமுகவை செங்குத்தாக உடைத்து விட்டு அப்படியே தவெகவை ஆதரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவை உடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை என தெரிவித்துவிட்டார் சண்முகம்.

அப்படியானால், வேறு எந்த வகையில் ஆதரவு தர இயலும் என ஆலோசிக்கப்பட்டதில், அதிமுகவில் எடப்பாடியின் ஆளுமையை குறைக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெறுவோம். அதன் மூலம் தவெகவை ஆதரிக்கலாம் என சண்முகம் யோசனை சொல்ல, நேற்று இரவு, சண்முகம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி விவாதித்துள்ளனர். அப்போது, சட்டமன்ற அதிமுக தலைவராக சண்முகத்தை தேர்வு செய்வது என்றும், அவரது தலைமை யில் தவெகவை ஆதரிக்கலாம் என்றும் தீர்மானித்துள்ளனர். அதிமுக வின் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் சண்முகத்தை ஆதரிப்பதால், இது நடைமுறைக்கு வரும் போது பெரிய அளவில் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தாது. இதற்கிடையே, சண்முகம் தலைமையில் ரகசிய மீட்டிங் நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
காலை 11:00 - எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தவெக கூட்டணியை ஆதரிப்பதே நல்லது என வெளிப்படையாகப் பேசினார். மற்றொரு முக்கியத் தலைவரான தங்கமணி, தவெக-விற்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம் எனத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
மதியம் 12:00 - தவெக தரப்பு மூவ்
மறுபுறம், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சித் தலைவர் விஜய்யைச் சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். அதிமுகவின் ஒரு பிரிவினர் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கும் நிலையில், அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், தவெக அரசுக்கு அதிமுக ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சந்திப்பின் போது புஸ்ஸி ஆனந்திடம் எடப்பாடி பழனிசாமி, நேரடியாக ஆதரவை உறுதிப்படுத்தாவிட்டாலும், மிக முக்கியமான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் கூறுகையில்: "தமிழகத்தில் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் இலக்கு. எனவே, திமுகவின் அதிகாரத்தை எதிர்க்கும் மற்றும் மக்கள் நலனை முன்னிறுத்தும் சக்திகளுக்கு அதிமுக துணை நிற்கும்." இந்த பேச்சு , தவெக ஆட்சிக்கு அதிமுக மறைமுகமாகவோ அல்லது வெளியிலிருந்தோ ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதையே காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மதியம் 2:00 - கிளைமாக்ஸ் நோக்கி தமிழக அரசியல்
தற்போதைய நிலவரப்படி, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இணைந்து விஜய்யைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஒருவேளை தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வராவிட்டால், அதிமுக செங்குத்தாக உடைந்து ஒரு பெரும்பான்மை குழு விஜய்க்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அதிமுகவில் பாஜகவின் தாக்கம் இருப்பதாகப் பேசப்படும் நிலையில், விஜய் நேரடியாக அதிமுகவுடன் கைகோர்ப்பாரா அல்லது சண்முகம் தலைமையிலான அணியின் ஆதரவை மட்டும் ஏற்பாரா என்பதே இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அடுத்த சில மணிநேரங்களில் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படலாம்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications