Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரே நாடு ஒரே தேர்தல்.." அதிமுக இல்லாமல் போய்விடும்.. எடப்பாடியை சாடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுக ஆதரவு அளித்ததை எடப்பாடி பழனிசாமி தெரிந்து செய்தாரோ.. தெரியாமல் செய்தாரோ தெரியவில்லை. ஏனென்றால் தற்போது அதிமுகவிற்கு 60 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் அதிமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இல்லாத நிலைதான் ஏற்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அதிமுக ஆதரவு அளித்ததை

அதிமுக ஆதரவு அளித்ததை

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என அறிவித்ததற்கு பல காரணங்கள் உள்ளன. மறைமலை அடிகளார் போன்ற 500 தமிழறிஞர்கள் கூடி தை முதல் நாள் தமிழ்நாடு என தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். தமிழர் திருநாள் என்றால் தமிழ்ப்புத்தாண்டு என்று பொருள். எனவே தமிழ்ப் புத்தாண்டு என குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஓரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுக ஆதரவு அளித்ததை எடப்பாடி பழனிசாமி தெரிந்து செய்தாரோ.. தெரியாமல் செய்தாரோ தெரியவில்லை.

ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இல்லாமல் போய்விடும்

ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இல்லாமல் போய்விடும்

ஏனென்றால் தற்போது அதிமுகவிற்கு 60 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் அதிமுகவிற்கு ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இல்லாத நிலைதான் ஏற்படும். திமுக மேடையில் அநாகரீகமாக பேசினால் அது கண்டித்தக்கது. யாராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பேசுவதை திமுக ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற செயல்பாடுகளை முதல்வர் ஆதரிக்க மட்டார். திமுகவில் இருப்பவர்கள் யாரும் இதுபோன்ற அநாகரீக செயலை விரும்புவது இல்லை.

ஆளுநர் மாளிகையே புகார்

ஆளுநர் மாளிகையே புகார்

நிச்சயம் அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமைக் கழகத்திற்கு நானும் பரிந்துரைப்பேன். பேச்சாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்து பேச வேண்டும். யாரோ ஒரு பேச்சாளர் பேசியதற்கு ஆளுநர் மாளிகையே புகார் அளித்துள்ளது வியப்பாக உள்ளது. மற்ற கட்சிகளில் உள்ள பேச்சாளர்கள் 100 சதவீதம் பேர் அநாகரிகமாகத்தான் பேசுகின்றனர். அவர்கள் யாரையும் அந்தக் கட்சிகள் கண்டிப்பது கிடையாது. ஆளுநர் குறித்து பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி என்ற பேச்சாளருக்கு இவ்வளவு விளம்பரம் தேவையா என தெரியவில்லை.

தமிழ்நாட்டின் நிலவரத்தை..

தமிழ்நாட்டின் நிலவரத்தை..

நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடாக உள்ளது. பாஜக தலைவர் நீட் வேண்டும் என்று கூறினால் அவர் மக்களுக்கு எதிராக உள்ளார் என்றுதான் பொருளாகும். தமிழ்நாட்டின் நிலவரங்களை முழுமையாக தெரிந்தால் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்து இருக்க மாட்டார். எனவே அவர் கருத்து கூறுவதற்கு முன்னால் தமிழ்நாட்டின் நிலவரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சியில் தான் குட்கா

அதிமுக ஆட்சியில் தான் குட்கா

அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் கட்டுப்பாடு இன்றி பரவியது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. தமிழ்நாட்டில் எங்காவது கஞ்சா பயிரிடுதல் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அண்டை மாநிலங்கள் வழியாக போதை பொருட்கள் ஊடுருவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில்தான் குட்கா உள்ளிட்ட போதை பொருள் கிடைத்தது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+