தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன் முடிவு தற்கொலைக்கு சமம்- அதிமுக சீனியர் தலைவர் செம்மலை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்திருக்கிறார். செங்கோட்டையனின் இந்த முடிவு, தற்கொலைக்கு சமம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செம்மலை விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நேற்றுவரை எந்த கட்சியில் இணைவார் என்று பேச்சுகள் அடிபட்டிருந்த நிலையில் இன்று தவெகவில் இணைந்திருக்கிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியுடனான உரசல், கட்சியிலிருந்து வெளியேற ஒரு காரணம் அவ்வளவுதான்.

அம்மா காலத்திலேயே இவர் கட்சியிலிருந்து விலக முயற்சி எடுத்திருந்தார். அரசியலில் சகிப்புத்தன்மை, நிதானம் வேண்டும். குறிப்பாக தலைமையை மதிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் பொறுமையாக இருந்தார். செங்கோட்டையனுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் செங்கோட்டையன் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
இது ஒரு பத்திரிக்கை செய்தி அவ்வளவுதான். எனக்கு என்ன கேள்வி எனில், செங்கோட்டையன் விஜய்யிடம் அரசியல் கற்றுக்கொள்ளப்போகிறார? இவர் சொல்லிக்கொடுக்கப்போகிறாரா? நதி கடலில் கடக்கலாம். கடல் நதியில் கலக்கமா? இது தற்கொலைக்கு சமம். தற்கொலைக்கு முடிவெடுத்தவர்களை தடுத்து வைத்திருக்க முடியாது.
ஏற்கெனவே வளர்ந்த கட்சியில் இருந்துவிட்டு, இனி ஒரு கட்சியை வளர்க்கப்போகிறேன் என்று சொல்வது வேடிக்கை. தவெக தொண்டர்களுடன் ஒட்டவே முடியாது. வேண்டுமானால் தலைவர்களுடன் ஒட்டி உரசிக்கொண்டிருக்கலாம். அரசியல் வாழ்க்கை முடிந்துபோனது" என்று விமர்சித்திருக்கிறார்.
-
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்றப்படுமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய பதில்! -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications