கோயில் பூசாரிகள் சங்கம் 'ட்விஸ்ட்'.. எதிர்பார்க்காத ஸ்டாலின் - பாஜக கடும் அதிர்ச்சி!
சென்னை: தமிழ்நாடு நகர்புற மற்றும் கிராமப்புற அனைத்து சமுதாய அனைத்து கோயில் பூசாரிகள் சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அல்லது மீண்டும் ஆளும் அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது யாருமே எதிர்பார்க்காத பல 'சஸ்பென்ஸ்' காட்சிகள் அரங்கேறுமா என்பது அன்றைய தினம் தெரிய வரும்.

திமுக ஹேப்பி
கூட்டணி, தொகுதிகள் பங்கீடு என்று அனைத்தும் முடிந்து, கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பி.மதியழகன் தலைமையிலான தமிழ்நாடு நகர்புற மற்றும் கிராமபுற அனைத்து சமுதாய அனைத்து கோயில் பூசாரிகள் நலச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

திமுக வெற்றிப் பெற
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிக்கு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதோடு, தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தமிழ்நாடு நகர்புற மற்றும் கிராமப்புற அனைத்து சமுதாய அனைத்து கோயில் பூசாரிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பாடுபடுவார்கள்" என உறுதி அளித்துள்ளார்.

திமுக விளக்கம்
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் கந்த சஷ்டி கவசம் சர்ச்சையில், 'திமுக இந்து விரோத கட்சி' என்று பாஜகவினரும், 'திமுகவை இந்து விரோதியாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது' என்று திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தன. திமுக இந்து விரோத கட்சியல்ல என்று அக்கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

சிலர் திட்டமிட்டு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்து எதிர்ப்பு குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். அதில், "நம்மை ஏதோ கோயிலுக்கு எதிரி போல் சித்தரிக்கிறார்கள். கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது. அதைப் புரிந்துகொள்ளாமல் பாஜக, ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்டு திமுக இந்துக்களுக்கு எதிரி போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுக தனது தேர்தல் அறிக்கையில், தமிழகம் முழுவதும் உரிய காலம் கடந்தும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படாத கிராம கோயில்கள் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்படும். இதற்காக அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என்று அறிவித்தது. மேலும், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திமுக ஹேப்பி
இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு நகர்புற மற்றும் கிராமப்புற அனைத்து சமுதாய அனைத்து கோயில் பூசாரிகள் சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பாஜக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில், பூசாரிகள் சங்கம் திமுக கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு பிராமண நல சங்கம் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications