சென்னையிலிருந்து வெளியூர் போகும் மக்களுக்கு நிம்மதி! கிளாம்பாக்கம் பஸ் நிலையம்.. எப்படி போவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்திலிருந்து படிப்படியாக பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு எப்படி செல்வது என்ற குழப்பம் மக்கள் பலரிடையே உள்ளது. அதை பற்றி எளிமையான விளக்கம் இங்கே கொடுத்துள்ளோம்.

கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா சமீபத்தில் கூட இந்த பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

விரைவில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமானம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. முன்பே திறக்கப்பட வேண்டிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது.

All you need to know about how to reach Kilamakkam Bus Stand from Chennai main

ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு எப்படி செல்வது என்ற குழப்பம் மக்கள் பலரிடையே உள்ளது. அதை பற்றி எளிமையான விளக்கம் இங்கே கொடுத்துள்ளோம்.

எப்படி செல்வது: இந்த பேருந்து நிலையம் வண்டலூர் அருகே அமைந்து உள்ளது. இதற்கு மெட்ரோவில் நேரடியாக செல்ல முடியாது. ஏர்போர்ட் வரை மெட்ரோவில் சென்று அங்கிருந்து பின்னர் வண்டலூர் செல்ல முடியும்.

இல்லையென்றால் ஏர்போர்ட் பஸ் ஸ்டாப்பில் பேருந்துகள் கிடைக்க வாய்ப்பு குறைவு என்பதால் ஆலந்தூரிலேயே இறக்கிவிட்டு அங்கிருந்து வண்டலூர் வழியாக இங்கே செல்லலாம். மின்சார ரயிலில் செல்வதற்கு ஊர்ப்பக்கம் மின்சார ரயில் ஸ்டாப்பில் இறங்கலாம். அங்கிருந்து அருகே இருப்பதால் எளிதாக நடக்க முடியும்.

அதுவே வண்டலூர் மின்சார ரயில் நிலையத்தில் இறங்கினால் கொஞ்சம் அதிக தூரம் நடக்க வேண்டி இருக்கும். மற்றபடி பேருந்து சேவை நிறைய உள்ளது. செங்கல்ப்ட்டு மார்க்கம் செல்லவும் எல்லா பேருந்து சேவையும் இதை கடந்தே செல்லும் என்பதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதாக அடைய முடியும்.

திட்டமிடல் இல்லை: இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கே மழைநீர் தேங்கும் அபாயம் இருந்தது. அதை எல்லாம் சரி செய்து இப்போது கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் 25 சதவிகிதம் கூடுதலாக செலவு செய்து இந்த முறை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை.இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்.

இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.

படிப்படியாக திறப்பு: இந்த நிலையில்தான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்திலிருந்து படிப்படியாக பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

சிஎம்டிஏ அதிகாரிகள் முதலில் கிளாம்பாக்கத்தில் இருந்து தெற்குப் பகுதிக்குகளுக்கு பேருந்து போக்குவரத்தை மேற்கொள்ள உள்ளனர். அதைத் தொடர்ந்து வேலூர் போன்ற மாநிலத்தின் வடக்குப் பகுதிகளுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

All you need to know about how to reach Kilamakkam Bus Stand from Chennai main

இது தொடர்பாக ஊடகங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அளித்து உள்ள பேட்டியில்"பஸ் சேவைகள் செயல்படத் தொடங்கினால்தான் அதில் உள்ள பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியும். இதை படிப்படியாகவே செய்ய வேண்டும். அப்போதுதான் செயல்பாட்டில் உள்ள பிரச்சனைகளை எங்களால் புரிந்து கொண்டு குறைகளை சரி செய்ய முடியும். . இதன்மூலம் பொதுமக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் என சிஎம்டிஏ அமைச்சர் பி கே சேகர் பாபு தெரிவித்தார்.

முக்கியமாக முதல் கட்டமாக ஒரு சில ஆம்னி பேருந்துகளில் போர்ட் செய்யும் இடமாக இது செயல்படும். அதன்பின் இங்கே அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+