"சாவர்க்கர்" துரைமுருகன்.. வாயில அப்டி வந்துடுச்சாம், உடம்பு வேற சரியில்லையாம்.. நெட்டிசன்கள் ட்வீட்
சென்னை: சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதையடுத்து, அவரை விமர்சித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவந்தவர்... பிறகு கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். "சாட்டை" என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார்...
திமுகவிடம் 4 மேயர் சீட் கேட்கும் காங்... எப்போது பேச்சுவார்த்தை? காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, சோஷியல் மீடியாவில் முக்கியத் தலைவர்களை ஆபாசமாக சித்திரித்து, விமர்சித்து, பல்வேறு வீடியோக்களை வெளியிடும் போக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது...

கொதிப்பு
அதில் முக்கியமான ஒருவராக இருந்து வருபவர் சாட்டை துரைமுருகன்.. ஒருமுறை மறைந்த கருணாநிதியையும் மிக மோசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், திமுகவினருக்கு இன்றுவரை அந்த கொதிப்பு அடங்கவே இல்லை.. இவரது பெரும்பாலான வீடியோக்கள் திமுகவை சாடியே அமைந்து வருகிறது.. இதனால் ஏற்கனவே இவர் கைதாகியும் உள்ளார்.. கைதாவதும், ஜாமீன் பெறுவதும் இவருக்கு அடிக்கடி ஏற்படும் சாதாரண நிகழ்வாகும்.

கன்னியாகுமரி
இந்நிலையில்தான், கடந்த அக்டோபர் 11- ம்தேதி குமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியிருந்தார். எல்லை மீறி ஸ்டாலினை விமர்சிக்கவும் செய்தார்.. ஆனால், இவருக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த சீமான், துரைமுருகனை எதுவுமே கண்டிக்கவில்லை, துரைமுருகனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் பரபரத்தன..

குற்றச்சாட்டு
இதையடுத்து, இதுதொடர்பாக சாட்டை முருகன் மீது தக்கலை போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்பு சென்னைக்கு செல்ல முயன்ற சாட்டை முருகனை நள்ளிரவில் போலீசார் கைதும் செய்தனர். பிறகு, சாட்டை துரைமுருகன் ஜாமீனுக்கு முயற்சித்தார்..

மறுப்பு
ஆனால், யாரையும் புண்படுத்தி வீடியோ வெளியிடவோ, பதிவேற்றம் செய்யவோ கூடாது என நிபந்தனை விதித்துதான், துரைமுருகனை ஜாமீனில் கோர்ட் ஏற்கனவே விடுவித்தது.. அப்படி இருந்தும், மறுபடியும் இதே தவறை துரைமுருகன் செய்துள்ளதால், அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது...

ஜாமீன் கிடைத்தது
உணர்ச்சி வேகத்தில் திமுகவை தான் அப்படி பேசியதாகவும், இனிமேல் அப்படி பேசமாட்டேன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றெல்லாம் துரைமுருகன் தன்னுடைய ஜாமீன் மனுவில் முன்னதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இப்போது விஷயம் என்னவென்றால், ஜாமீன் மனுவில் துரைமுருகன் தெரிவித்திருந்த விஷயங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது பரவி வருகிறது..

ஸ்கிரீன்ஷாட்
அந்த வரிகளை மட்டும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.. அத்துடன் நாம் தமிழர் கட்சியையும் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.. "மீண்டும் மண்டியிட்ட சாவர்க்கர் துரைமுருகன்.. எதோ உணர்ச்சி வேகத்துல அந்த சொற்கள் அவர் வாயில இருந்து வந்துடுச்சாம். இனி இப்படி பேச மாட்டாராம்! நாம் தமிழர் கட்சி என்பது கோழைகளின் கூடாரம் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியானது." என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.

வைரல் ட்வீட்கள்
"உடல்நிலை சரி இல்லைன்னு வேற கெஞ்சியிருக்காரு நாம் தமிழர் கட்சியின் சாவர்க்கர் என்றும்,சட்ட எரிப்பு போராட்டத்தின் போது, நீதிமன்றத்தில் கூற வேண்டியது என்ன என்று விடுதலை நாளேட்டில் பெரியார் குறிப்பிட்டது இது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெரியார் சிறைக்கு சென்ற போது அவருக்கு வயது 78. அவரோட பேரை சொல்ல கூட இந்த கோழைகளுக்கு அருகதை இல்ல" என்பன போன்று ட்வீட்கள் பரபரத்து வருகின்றன.. இனி துரைமுருகன் அமைதி போக்கை கடைப்பிடிப்பாரா? அல்லது சாட்டையை மேலும் வேகமாக சுழற்றுவாரா? என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.