Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி திணிப்பு இல்ல.. அது வாய்ப்பு.. “எங்க பார்வையே வேற”.. 2024 கூட்டணி பற்றி பாரிவேந்தர் ‘பளிச்’!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஐஜேகே நிறுவனரும், பெரம்பலூர் எம்.பியுமான பாரிவேந்தர், 2024 தேர்தலில் தேசியக் கட்சியுடன் தான் கூட்டணி அமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தி படிக்கச் சொல்வதை, இந்தி திணிப்பாக பார்க்கக்கூடாது, இன்னொரு மொழியை படிக்கக் கிடைக்கும் வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும் பாரிவேந்தர் கூறியுள்ளார்.

இன்றைய பேச்சு மூலம், இந்திய ஜனநாயக கட்சி வரும் 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்ற யூகங்களுக்கு வலு சேர்த்துள்ளார் பாரிவேந்தர்.

தமிழ் பேராயம் விருதுகள்

தமிழ் பேராயம் விருதுகள்

சென்னை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப் பேராயம் சார்பில், 2012ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் பேராய விருதுகள் - 2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறக்கூடிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் பெயர்களை சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்வில், பெரம்பலூர் எம்.பியும், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வேந்தருமான டாக்டர் பாரிவேந்தர் கலந்து கொண்டு அறிவித்தார்.

 இந்தி படிக்காததால் பாதிப்பு

இந்தி படிக்காததால் பாதிப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர் எம்.பி, "இந்தி மொழி படிக்காததால் எங்களது தலைமுறையை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாகவி பாரதியார் 5 - 6 மொழிகளைக் கற்றுள்ளார். அனைவரும் நிறைய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். எத்தனை மொழி தெரிந்திருக்கிறதோ அவ்வளவு நல்லது. அதே நேரத்தில் மாணவர்கள் தங்களது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும். ஆங்கிலம் கூடுதலாக படிப்பதுடன் பிற மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்.

திணிப்பு அல்ல, வாய்ப்பு

திணிப்பு அல்ல, வாய்ப்பு

இந்தி தான் கற்க வேண்டும் என்று இல்லை, ஏதாவது ஒரு மொழியைத்தான் கற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். பிற மொழியைக் கற்று அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனை திணிப்பு என எடுத்துக்கொள்ளக்கூடாது, இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு எனக் கருதிக் கொள்ளவேண்டும்" எனத் தெரிவித்தார்.

இலவசம்

இலவசம்

தொடர்ந்து பேசிய பாரிவேந்தர், இலவசம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை தவறாக சிலர் புரிந்து கொள்கின்றனர். கல்வி, மருத்துவம் மட்டும் இலவசமாக அளித்து, மற்றவற்றை அவர்களாகவே சம்பாதித்து பெறக்கூடிய சூழலை உருவாக்கி கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஓட்டுக்கு பணம்

ஓட்டுக்கு பணம்

மேலும், தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யும் நிலை மாற வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்களின் பின்புலனை ஆராய்ந்து வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும். காலப்போக்கில் ஓட்டுக்கு பணம் பெறும் நிலை மாறும். கேரளாவில் தற்போது ஓட்டுக்கு பணம் வாங்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற நிலை தமிழகத்திலும் உருவாகும் எனத் தெரிவித்தார்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், "திமுகவில் இருந்து எந்தவித அதிருப்தியுடன் வெளியேறவில்லை. எங்களுக்கு எந்தவித மனவருத்தமும் கிடையாது. ஐஜேகே கட்சியை பொறுத்துவரை எங்களது பார்வை தேசிய அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் கட்சி தொடங்கினாலும், தேசிய அளவில் வளர்வது தான் எங்கள் நோக்கம்.

 தேசியக் கட்சியோடு கூட்டணி

தேசியக் கட்சியோடு கூட்டணி

சில ஆண்டுகளுக்கு முன் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஐஜேகே தொண்டர்கள் 10 பேர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஒரு சூழ்நிலை காரணமாக திமுகவோடு கூட்டணி வைத்தோம். அதேநேரத்தில் எங்கள் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஐஜேகே அநேகமாக தனித்து போட்டியிடும் அல்லது தேசியக் கட்சியோடு கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

முன்பே சொன்னோம்

முன்பே சொன்னோம்

பாஜக கூட்டணியில் இணைவதற்கான தொடர் முயற்சிகளில் பாரிவேந்தர் இறங்கியிருப்பதாகவும், பெரம்பலூர் தொகுதியை குறிவைத்து பாஜக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் பேசி வருவதாகவும் சில தகவல்களின் அடிப்படையில் நேற்று ஒன் இந்தியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், பாரிவேந்தரின் இன்றைய பேச்சு அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+