காயத்ரி பேரையே சொல்லலையே.. அதிமுக சண்டையை பார்த்து ஊரே சிரிக்குது.. அமர் பிரசாத் EXCLUSIVE பேட்டி
சென்னை: திமுக + பாஜக கூட்டணி அமைக்க போவதாக சிவி சண்முகம் கூறியது, அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் கடுமையான விமர்சனங்களை வைத்தது என்று பல்வேறு விஷயங்களுக்கு பாஜகவின் தமிழ்நாடு விளையாட்டு & திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பதில் அளித்துள்ளார். ஒன்இந்தியா தமிழுக்கு இது தொடர்பாக சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
சமீபத்தில் திமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. அதிமுக + பாஜக கூட்டணி உடைய போவதாக பல்வேறு விவாதங்கள் அரசியல் உலகில் நடந்து வரும் நிலையில்தான் சிவி சண்முகம் திமுக + பாஜக கூட்டணி அமைக்க போவதாக கூறியுள்ளார்.
கூட்டம் ஒன்றில் பேசிய சி வி சண்முகம், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள். விசிக, கம்யூனிஸ்ட் எல்லாம் இனி திமுகவிற்கு தேவை இல்லை. அவர்களை திமுக கழற்றிவிட போகிறது. திமுகவிற்கு பிரஷர் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள், இல்லை என்றால் காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று பிரஷர் கொடுத்து வருகின்றனர் என்று கூறி இருந்தார்.

அண்ணாமலை பதில்
இந்த நிலையில்தான் சிவி சண்முகம் கருத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதில், நான் இன்னும் சென்னை பாஜக ஆபிஸ் செல்லவில்லை. சிவி சண்முகம் பாஜகவில் சேர்ந்துவிட்டாரா என்ன? நான் போய் பார்க்கவில்லை. பாஜக கூட்டணி பற்றி பேச வேண்டும் என்றால் பாஜகவில் இருக்க வேண்டும். அவர் என்ன பாஜகவில் இருக்கிறாரா? அதிமுக - பாஜக கூட்டணி பற்றி பேச அந்த கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள். யாரோ 3ம் கட்ட தலைவர்கள் கூட்டணி பாஜகவின் கூட்டணி பற்றி பேசலாமா. அவர் பாஜகவின் கூட்டணி பற்றி பேசுகிறார் என்றால் அவர் ஒன்று பாஜகவில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த நிலையில் பாஜகவின் தமிழ்நாடு விளையாட்டு & திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் ஒன்இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டி பின்வருமாறு..

அமர் பிரசாத் ரெட்டி பேட்டி
கேள்வி: திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் சொல்லி இருக்கிறாரே?
முதலில் அதிமுகவில் அவங்க உட்கட்சி பிரச்சனையை பார்க்கட்டும் சார். அவங்க கட்சி பிரச்சனையை பார்த்து ஊரே சிரிக்குது. கட்சியில் இப்படி நடக்குதே என்று ஊரே சிரிச்சிகிட்டு இருக்கு. எங்க கட்சியை தலைவர் பார்த்துப்பாரு. நாங்க யாருடன் கூட்டணி வைக்கணும்கிற முடிவை தலைவர் எடுத்துப்பாரு. அவர் அதை பத்தி பேச வேண்டாம். எங்கள் நட்பான கட்சி என்கிற முறையில் அதிமுகவை மதிக்கிறோம். அவரை மதிக்கிறோம். ஆனால் அவர் எங்க கூட்டணி பத்தி பேச கூடாது. அவர் யார் பேசுறதுக்கு? அவர்தான் அதிமுகவில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவரா அல்லது பாஜகவில் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவரா? பாஜகதான் தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம். பாஜக பற்றி பேசினால்தான் லைம் லைம்லைட்டில் இருக்க முடியும் என்று அவர் இப்படி பேசுகிறார். அவ்வளவுதான்.

காது கேளாதோருக்கான கருவி
கேள்வி: கோவையில் பாஜக சார்பாக வழங்கப்பட்ட இந்த காது கேளாதோருக்கான கருவியின் விலை 10000 ரூபாய் என்று அண்ணாமலை கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.. ஆனால் அந்த கருவி 345 ரூபாய்க்கே ஆன்லைனில் கிடைப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டு வைத்து உள்ளனரே?
பதில்: அந்த கருவி பற்றி எனக்கு தெரியவில்லை.. அண்ணாமலை இது தொடர்பாக என்ன பேசினார் என்றும் எனக்கு தெரியாது. அதனுடைய உண்மையான விலை எனக்கு தெரியாது. நீங்கள் அதன் விலையை 345 ரூபாய் என்று சொல்கிறீர்கள். அதை வைத்து சொல்கிறேன்.. 345 ரூபாய பொருளாக இருந்தாலும் சரி.. காசு எவ்வளவு என்பது முக்கியம் இல்லை சார்.. அந்த எண்ணம்தான் முக்கியம். அதை கொடுக்க வேண்டும் என்ற மனசு இருக்கிறதே அதுதான் முக்கியம். மற்றபடி அந்த கருவி பற்றி எனக்கு தெரியாது என்பதால் அதை பற்றி சொல்ல முடியாது. அதே சமயம் திமுககாரன் இதை பிடுங்காமல் இருந்தால் சரி.. திமுக காரன் அதையும் திருடாமல் இருந்தாலே போதும். அதை திமுககாரன் பிடிங்கி 2வது ஹேண்டா வித்துடுவான்.. அதை மட்டும் செய்யாமல் இருந்தால் சரி.

காயத்ரி
கேள்வி: அண்ணாமலை என்னை பற்றி பொய் சொல்கிறார், துபாய் ஹோட்டலில் இருந்ததாக பொய் சொல்கிறார், 150 பேருக்கு முன் என்னுடைய கேரக்டரை அவமானப்படுத்துகிறார்.. இதனால் பாஜகவினருக்கு பிரச்சனை இல்லையா என்று காயத்ரி ரகுராம் ட்விட் செய்து இருக்கிறாரே?
பதில்: அண்ணாமலை சொன்னதாக சொல்லப்படும் துபாய் ஹோட்டல் விஷயமே பொய். அண்ணாமலை அப்படி எல்லாம் பேசவே இல்லை. கட்சி மீட்டிங்கில் அவர் பேசியதாக சொல்லப்படும் எல்லாம் வதந்தி. சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை பற்றி கட்சி மீட்டிங்கில் அண்ணாமலை ஏன் பேச வேண்டும். அந்த அம்மா பேரையே அண்ணாமலை சொல்லவில்லையே.. அப்படி இருக்கும் போது காயத்ரி ஏன் தன்னை பற்றி சொன்னதாக நினைத்துக்கொள்ள வேண்டும்? காயத்ரி ஏன் அதை தன்னுடன் ஒப்பிட வேண்டும்.

சர்ச்சை
அவரின் பெயரை சொல்லி பேசாத போது, தன்னை பற்றித்தான் அண்ணாமலை பேசினார் என்று ஏன் அவர் நினைக்க வேண்டும்.. இப்போ ஒரு செய்தியாளர் பெயரை குறிப்பிடாமல் அவர் திமுகவிடம் பணம் வாங்கிவிட்டார் என்று சொன்னால்.. உடனே நீங்கள் உங்களை குறிப்பிட்டு சொன்னதாக நினைத்துக்கொண்டால் நீங்கள் காசு வாங்கியதாகத்தானே அர்த்தம். அதேபோல்தான் காயத்ரி பெயரை சொல்லி பேசாத போது தன்னை பற்றித்தான் அண்ணாமலை பேசினார் என்று ஏன் அவர் நினைக்க வேண்டும்.?, என்று அமர் பிரசாத் ரெட்டி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications