சென்னை புறநகரில் "ஏசி"யால் வந்த பிஸி.. AC க்கு வந்த வாழ்வை பாருங்க.. வேற வழியில்லாம கிளம்பிட்டாங்க
சென்னை: சென்னை புறநகர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளிலும் ஏசி விற்பனை அதிகரித்து காணப்படுகிறதாம்.. கடந்த வருடத்தைவிட இந்த முறை ஏசி விற்பனை மும்மடங்கு அதிகரித்துள்ளதாம்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தவாறு காணப்படுகிறது.. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அலர்ட் செய்து வருகிறது.. கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என்றும் கூறியிருந்தது..

தமிழகம்: நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், வெயிலில் தேவையில்லாமல் நடமாட வேண்டாம் என்றும் வானிலை மையமும், சுகாதாரத்துறையும் மக்களை கேட்டுக் கொண்டேயிருக்கின்றன.. ஆனாலும் வெயில் சமாளிக்க முடியவில்லை.. எனவே, ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 மாவட்டகளுக்கு குறையாமல், வெயில் சதம் அடிப்பது இயல்பாகிவருகிறது.. இதில் பெரிதும் அதிர்ச்சியை தரக்கூடியது நீலகிரி மாவட்டம்தான்.. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெயில் தாங்காமல் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள் சுற்றுலா பயணிகள்.. ஆனால், ஊட்டியிலேயே வெயில் கொளுத்துவது அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தருகிறது.. ஊட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது.
கோடை வெயில்: இந்த கோடை காலத்தை சமாளிக்கவும் முடியாமல், கடும் வெப்பமும், புழுக்கத்தையும் எதிர்கொள்ள முடியாமல், வீடுகளில் AC, Air Cooler அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது... கரண்ட் பில் கலக்கத்தையும் மீறி ACயை இரவெல்லாம் ஓடவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏசி வாங்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. அனைத்து ஏசி கம்பெனிகளுக்குமே கடன் வசதி இருப்பதால், முன் தொகையை கட்டிவிட்டு, ஏசி வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.
வசதி படைத்தவர்கள்: இதுவரை வசதி படைத்தவர்கள் மட்டுமே ஏசியை உபயோகித்துவந்த நிலையில், இப்போது, ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்... நகரம், கிராமம் என வித்தியாசமின்றி பெரும்பாலானோர் ஏசி வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்களாம்..
காரணம், வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இரவில் கைக்குழந்தைகள் தூங்குவது கிடையாதாம்.. சில வீடுகளில் பிள்ளைகளின் வற்புறுத்தலுக்காகவே ஏசி வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக, கடைகளுக்கு திரண்டு செல்ல துவங்கியிருக்கிறார்களாம்..
மும்மடங்கு: எப்போதும் இல்லாமல், இந்த வருடம் குபீரென திரண்டு வரும் மக்களின் எண்ணிக்கையை கண்டு, ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வித சலுகைகளை சொல்லி ஏசிகளை விற்றுவருகின்றனவாம். இதனால், பண்டிகை காலம் போலவே, ஏசி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்..
எப்படியும் வருகிற ஜூன் மாதம் வரை கடும் வெயில் இருக்கும் என்பதால், ஏ.சி. விற்பனை கடந்த வருடத்தைவிட, 3 மடங்கு அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.. அப்படியே ஏ.சி.யை வாங்கினாலும் அதனை வீடுகளில் வந்து பொருத்துவதற்கு டைம் ஆகிறதாம்... முதல்முறையாக ஏசி பொருத்துபவர்களுக்கு, கரண்ட் பில் எப்படி வர போகிறதோ என்ற கலக்கமும் இப்பவே சூழ்ந்துள்ளதாம்..!!
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications