வீட்டு மனை, நிலம் வாங்கறீங்களா? வில்லங்க சான்றிதழில் பத்திர பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது
சென்னை: வில்லங்க சான்றிதழ்களின் அவசியம் என்ன தெரியுமா? தமிழக அரசு அறிவித்திருக்கும் புதிய சலுகை என்ன தெரியுமா?
வீடுகள், நிலம், வீட்டு மனை, போன்ற சொத்துகளை வாங்குபவர்கள், தாங்கள் வாங்கும் சொத்தினுடைய முந்தைய ஓனர்கள் குறித்தும், அதில் ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வார்கள். இதற்காக பெறப்படுவதே வில்லங்க சான்றிதழாகும். குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும்.

விவரங்கள்: வாங்கப்போகும் அந்த சொத்து இதுவரை யாரிடம் இருந்தது? யாரிடமிருந்து கைமாறி வந்தது? என்ற அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமல்ல, அந்த சொத்தானது, பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் உள்ளடங்கியிருக்கும். இதன்மூலம், அந்த சொத்து தொடர்பான வில்லங்கத்தினை நம்மால் முழுமையாக அறிய முடியும்.
இந்த வில்லங்க சான்றிதழ்கள் தற்போது தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. காரணம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானால், இந்த வில்லங்க சான்றிதழ்தான் உடனடி தேவையாக இருக்கிறது. இந்த வில்லங்க சான்றினை பெற வேண்டுமானால், பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதிருக்கும். இப்போது, ஆன்லைனிலேயே வில்லங்க சான்றினை பெற்றுக் கொள்ளலாம்.
புரோக்கர்கள்: இதுக்காக, புரோக்கர்கள் தேவையில்லை.. யாருக்கும் லஞ்சம் கொடுக்கவும் தேவையில்லை.. 1950 முதல் 1974 வரையிலான காலத்திற்குரிய வில்லங்க சான்றிதழ்களை வெப்சைட் மூலமாகவே நம்மால் பதிவேற்றம் செய்ய முடியும்...
பதிவுத்துறையின் http://www.tnreginet.net/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று நேரடியாக சென்று மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதேபோல, வில்லங்க சான்றை டவுன்லோடு செய்யவும், encumbrance certificate என்ற லிங்கை கிளிக் செய்து பயன்பெறலாம்.
புதிய வசதி: இந்த வசதிகளுடன் சேர்த்து கூடுதல் வசதி ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.. இதுநாள்வரை, வீடு, நிலம் தொடர்பான பத்திரப்பதிவு முடிந்துவிட்டால், சில நாட்கள் கழித்துதான், அதன் உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வில்லங்க விபரங்களை அறிய முடிந்தது.. ஆனால், இப்போது இந்த நடைமுறையை தமிழக அரசு மாற்றியிருக்கிறது.
அதன்படி, பத்திரப்பதிவு முடிந்த மறுநாளே, வில்லங்க விபரங்கள் அனைத்தையும் ஆன்லைனில், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பார்த்து கொள்ளலாம்...
பத்திரப்பதிவு செய்தவரின் செல்போன் நம்பருக்கு SMS மெசேஜ் வாயிலாக ஒரு இணையதள இணைப்புக்கான குறியீடு அனுப்பப்படும்.. அதன்வழியே சென்றால், தங்கள் சொத்து தொடர்பான பத்திரப்பதிவு விபரம் வில்லங்க சான்றிதழில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்ற மொத்த விவரங்களையும் அறிய முடியும்.
முற்றிலும் இலவசம்: ஆன்லைனில் வில்லங்க சான்றிதழை இலவசமாக பார்க்க வேண்டுமானால், https://tnreginet.gov.in/portal/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று, E-services> Encumbrance Certificate > View EC என்ற லிங்க்கை தர வேண்டும். இதில், வில்லங்க சான்றிதழை பார்க்கலாம்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications