வெறும் 3 நாட்களில் 15 பெட்ரோல் குண்டு வீச்சு! பறந்த முக்கிய உத்தரவு.. பாட்டிலில் பெட்ரோல் விற்க தடை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு கோவை சித்தாபுதூர் பகுதியில் மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அதன் பின்னர் இதுபோன்ற சம்பங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.
இப்படி அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் உருவாகி உள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

கோவை
கோவை பாஜக அலுவலகத்தைத் தொடர்ந்து அங்கு ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக பிரமுகரின் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. அதேபோல பாஜக நிர்வாகிக்குச் சொந்தமான கடை ஒன்றில் ஈரோட்டிலும் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதேபோல பொள்ளாச்சியிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியது.

பெட்ரோல் குண்டு
இப்படிக் கடந்த மூன்று நாட்களில் மட்டும் மொத்தம் 15 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. கோவையில் மட்டும் 5 சம்பவங்கள் நடந்துள்ளன. கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

போலீசார் குவிப்பு
கோவையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போலீசாருடந் அதிவிரைவு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளன. அங்கு சுமார் 4000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலோசனை
இருப்பினும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் போலீசார் கைு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தச் சூழலில் இன்று கோவையில் மத தலைவர்களுடன் கோவை ஆட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேலும், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கோவை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பொய் தகவல்கள்
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமீரன், இந்தச் சம்பவங்களில் பொதுமக்கள் உயிருக்கோ அல்லது உடைமைக்கோ அவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் கோவை மக்கள் பதற்றப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், பெட்ரோல் குண்டு தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தடை
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பங்கள் இப்படி அதிகரித்து வரும் இந்தச் சூழலில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. திருவாரூரில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற உத்தரவை வெளியிட வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications