என்ஐஏ சோதனை.. நாங்கள் ஜனநாயக ரீதியாக இயங்குகிறோம்.. தடை செய்ய முடியாது.. தமிழக பிஎப்ஐ விளக்கம்
சென்னை: ‛‛பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தடை செய்ய முடியாத அமைப்பு. நாங்கள் ஜனநாயக ரீதியாக இயங்குகிறது. என்ஐஏ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ்ஸின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது'' என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது சேக் அன்சாரி கூறினார்.
இந்தியா முழுவதும் 13க்கும் அதிகமான மாநிலங்களில் கடந்த 22ம் தேதி அதிகாலை 2 மணி முதல் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ அலுவலங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழகத்திலும் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் நடந்தன.

சோதனை-கைது
தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 10 மாநிலங்களில் நடத்தப்படும் முக்கிய நடவடிக்கையில் என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது.

தடை செய்ய திட்டம் என தகவல்
இதற்கிடையே தான் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

பிஎப்ஐ தலைவர் பேட்டி
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக தலைவர் முகமது சேக் அன்சாரி பேட்டியளித்தார். அப்போது அவர் தமிழகத்தில் நடந்த ஏன்ஐஏ சோதனை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விளக்கம் அளித்தார். இதுபற்றி முகமது சேக் அன்சாரி கூறியதாவது:

ஜனநாயக ரீதியாக இயங்குகிறோம்
ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு உறுதுணையாகவும், ஆதரவாக உள்ளது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்பது தடை செய்ய முடியாத ஒரு அமைப்பு. ஜனநாயக ரீதியாக இயங்குகிறது. தடை செய்யக்கூடிய எந்த ஆவணங்களும் இல்லை. ஏறத்தாழ 30 ஆண்டுகளாக இந்த சமூகத்துக்காக பாப்புலர் ப்ரண்ட் ஆப் ஜனநாயக ரீதியாக தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறது. தடை செய்வதற்கு எந்தவித ஆதாரங்களும் கிடையாது. தடை செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறார்கள் என்றால் அவர்களை வலுவாக எதிர்க்கிறோம். அவர்களின் சித்தாந்தந்தை வலுவாக எதிர்க்கிறோம்.

நேர்க்கோட்டில் எதிர்ப்பு
பாஜகவின் மக்கள் விரோத போக்கை நேர்க்கோட்டில் நின்று எதிர்க்கும் அமைப்பு என்பதால் அவர்கள் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை குறிவைத்து நகர்வுகள் செய்கின்றனர். மத்திய விசாரணை அமைப்புகளான என்ஐஏ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜனநாயக ரீதியாக செயல்பட வேண்டிய இந்த அமைப்புகள் தற்போது ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு பணிய வைக்க முயற்சிக்கிறது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பணியாததால் தடை செய்வது தொடர்பாக முனைப்பு காட்டுவதாக தெரிகிறது.

ஆளுநர் மீது விமர்சனம்
ஆளுநரை பொறுத்தமட்டில் மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படும் நபராக இருக்கிறார். இந்த ஆளுநர் மட்டுமின்றி இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களை தவிர அந்த மாநிலங்களில் இரண்டு அதிகார மையம் உள்ளது. ஒன்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு. இன்னொரு அதிகார மையமாக ஆளுநர்கள் உள்ளனர். இந்த ஆளுநர்கள் தொடர்ச்சியாக பல்வேறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அதில் ஒன்று தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான குற்றச்சாட்டு.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications