Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 ‛மேஜர்’ பாயிண்ட்.. நாளை அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை.. ஏன் முக்கியம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நாளை மாலை 4.30 மணிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை ஆளுநர் ஆர்என் ரவியின் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் சட்டசபையில் செயல்படுவது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி பறிக்கப்பட்டதையும், புதிய எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்பி உதயக்குமார் நியமனத்தையும் சபாநாயகர் அப்பாவு ஏற்காத நிலையில் இந்த கூட்டம் 3 முக்கிய விஷயங்களை பற்றி ஆலோசனை செய்யும் வகையில் நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன 3 விஷயம்?

அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டின் மத்தியில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதையடுத்து பொதுக்குழு கூட்டப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே பொதுக்குழு மூலம் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி

மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பும் ஓ பன்னீர் செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்டது. அவர் நிர்வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு ஆர்பி உதயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் கூட இதற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் வழங்கி இருந்தாலும் கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதுஒருபுறம் இருக்க கட்சி பதவி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று ஓபன்னீர் செல்வம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 நாளை ஆளுநர் உரை

நாளை ஆளுநர் உரை

இந்நிலையில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நாளை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. முதல் நாளான நாளை ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றி சட்டசபை கூட்டத்தொடரை தொடங்கி வைக்க உள்ளார். காலை 9.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் ஆர்என் ரவி, காலை 9.50 மணி அளவில் சட்டசபை வளாகம் வருவார். சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பிறகு காலை 10 மணிக்கு சட்டசபையில் உரையாற்ற உள்ளார்.

முதல் நாளில் என்ன நடக்கும்?

முதல் நாளில் என்ன நடக்கும்?

ஆளுநர் ஆர்என் ரவி ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட உரையை வாசிப்பார். அதன்பிறகு அதற்கான தமிழ் உரையை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி அங்கிருந்து புறப்பட்டு செல்வார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள். இதுதான் தமிழக சட்டசபையில் நாளை நடைபெறும். வேறு எந்த நிகழ்வுகளும் முதல்நாளான நாளை இருக்காது.

அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

இந்நிலையில் தான் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தில் செயல்படுவது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது பல்வேறு அறிவுரைகளை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களுக்கு வழங்க உள்ளார்.

3 முக்கிய விஷயம்

3 முக்கிய விஷயம்

இந்த கூட்டத்தில் 3 முக்கிய விஷயங்கள் பற்றிய ஆலோசனைகள் பிரதானமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முதலாவதாக எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்கு ஆர்பி உதயக்குமார் நியமனத்தை அப்பாவு ஏற்காவிட்டால் என்ன செய்வது?, ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்படாவிட்டால் என்ன செய்வது?, சட்டசபையில் ஆளும் திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டி திறமையான எதிர்க்கட்சியாக செயல்படுவது எப்படி? என்பது பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+