மீண்டும் உயரும் கொரோனா.. விரைவில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் முக்கிய மீட்டிங்
சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜூலை 9ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியும் நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்
கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மார்ச் ஏப்ரல் மாதங்களில் 2ஆம் அலை தொடங்கியது.
குறிப்பாக மே மாதத்தில் வைரஸ் பாதிப்பு உச்சமடைந்தது. தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரத்தைக் கூட கடந்தது.

கொரோனா 2ஆம் அலை
முதல் அலையைப் போலவே 2ஆம் அலையிலும் தலைநகர் சென்னை தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்றதால் ஒரு கடத்தில் கொரோனா படுக்கையின்றி மருத்துவமனைகளின் வெளியிலேயே நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்துக்கிடக்கும் சூழலும் உருவானது. இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் முதலில் கடந்த மே மாதம் இரண்டு வாரங்கள் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே கொரோனா 2ஆம் அலைக் கட்டுக்குள் வந்தது.

கட்டுக்குள் வந்த வைரஸ்
கடந்த மே மாத இறுதி முதல் சுமார் 68 நாட்களுக்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இருப்பினும், கடந்த ஒரு வாரக் காலமாகவே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைவது அதிகரிப்பது என மாறி மாறி இருந்து வருகிறது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்காமல் பொது இடங்களில் ஒன்றுகூடுவதே இதற்குக் காரணம் குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டது. இதனால் தான் கடந்த முறை கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

மத்திய அரசு எச்சரிக்கை
வேக்சின் பற்றாக்குறை இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனால் வேக்சின் பணிகளும் பல இடங்களில் முழு வீச்சில் நடைபெறவில்லை. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக விலகவில்லை என ஆய்வாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர், இந்தச் சூழலில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பை விளக்கும் R Factor அதிகரித்து வருவதாக மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

புதிய கட்டுப்பாடுகள்
இதுபோன்ற தொடர் எச்சிக்கைகள் காரணமாக 2ஆம் அலையைப் போல நிலைமை கையை மீறிச் செல்லும் வரை காத்திருக்காமல் அரசு இயந்திரம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின. முதல்கட்டமாகத் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 9 பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வணிக வளாகங்கள் போன்ற கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டன. அதேபோல ஆடி பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

மாவட்டங்கள்
அதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டன. அதேபோல ஹோட்டல்களும் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன.

கொரோனா பாதிப்பு
இருப்பினும், வைரஸ் பாதிப்பு குறைந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இன்று மொத்தம் மொத்தம் 1997 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 220 பேருக்கும் தலைநகர் சென்னையில் 196 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோடு (161), செங்கல்பட்டு (130), தஞ்சை (119) , திருவள்ளூர் (106) ஆகிய மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது. நேற்றைய வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் சென்னை, கோவை உட்பட 20 மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

முதல்வர் மீட்டிங்
மாநிலத்தில் பரவலான இடங்களில் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கும் வுரும் ஜூலை 9ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீடிப்பது குறித்தும் ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் மருத்துவ வல்லுநர்கள், அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். ஏற்கனவே ஊரடங்கு அதிக காலத்திற்கு அமலில் உள்ளதால் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது வைரஸ் பாதிப்பைக் கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்படுமா என்பது நாளை தெரிய வரும்.!
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications