கனமழை ரிட்டன்ஸ்.. தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் போட்டுத்தாக்கும் கனமழை.. எப்போது குறையும்
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தலைநகர் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நகர்ப்பகுதிகளில் மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி தீவிர கனமழை பெய்யும் என்பதால் நாளைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் மழை
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடியே தற்போது நகரில் பல முக்கிய இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, பாரிமுனை, கொளத்தூர், புதுப்பேட்டை, சூளைமேடு, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இருளில் மூழ்கிய எழும்பூர் ரயில் நிலையம்
அதேபோல பாலவாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை மெரினா, சேத்துப்பட்டு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் எழும்பூர் ரயில் நிலையத்தில் முற்றிலுமாக மின் தடை ஏற்பட்டது. இதனால் அங்கு வந்த பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். நகர்ப் பகுதிகளில் மட்டுமின்றி சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், தரமணி, ஆதம்பாக்கம், ஆவடி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட்
இப்படி நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கனமழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவே கனமழை அதிகரித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி அறிவிப்பு
முன்னதாக சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications