அதிமுக பொருளாளர் பதவி ராசியே இல்லையாமே! நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! கடந்த கால வரலாற்றை பாருங்க!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமையை கைப்பற்றுவதை விட ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிறகு பொருளாளர் பதவியை யார் கைப்பற்ற போவது என்ற போட்டி தான் தற்போது அதிமுகவில் பேசும் பொருளாக உள்ளது. ஆனால் பொருளாளர் பதவி குறித்த ஒரு அச்சமும் மூத்த நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது..
மற்ற கட்சிகளைப் போல அதிமுகவின் பொருளாளர் பதவி என்பது அவ்வளவு சாதாரணமல்ல. அதிமுகவை பொருத்தவரை சட்டவிதிகளின்படி இல்லாவிட்டாலும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் யார் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அவர்களுக்கு தான் பொருளாளர் பதவி.
அதிமுகவில் அவைத்தலைவர் பதவியை விட பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்து மிகவும் அதிகாரம் மிக்க பதவிகளில் ஒன்று பொருளாளர் பதவி. பொருளாளர் பதவிக்கு அவ்வளவு சீக்கிரம் யாரும் வந்து விட முடியாது.

அதிமுக பொருளாளர்
எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றிய பிறகு பொருளாளர் பதவி வகித்தவர்கள் மிகச் சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்க மூன்று பேர் முன்னாள் முதல்வரும் தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் எம்பி, முன்னாள் அமைச்சர், தற்போது திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் என பல பதவிகளை வகித்த திண்டுக்கல் சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் பொருளாளர் பதவிகளை வகித்தவர்களில் குறிப்பிடத்தக்க முகங்கள்.

பதவியால் சர்ச்சை
ஜெயலலிதா காலத்தில் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் பல ஆண்டுகளாக அதே பதவியில் நீடித்து வருகிறார். காரணம் ஜெயலலிதா இருந்தபோது ஐவர் அணையில் முதல் இடத்தில் இருந்தவரும் அவர் சிறைக்கு செல்ல நேரிட்டபோது முதல்வராக பதவியேற்று, அவர் வந்தவுடன் பதவியை அவருக்காக விட்டுக் கொடுத்தவர் ஓ பன்னீர்செல்வம். விசுவாசம் என்றாலே ஓ பன்னீர்செல்வம் தான். நிகழ்கால பரதன் ஓ பன்னீர்செல்வம் என ஜெயலலிதாவே பலமுறை அவரை பாராட்டி இருக்கிறார். அப்படி விசுவாசம் மிக்கவர்களுக்கான பதவி தான் அதிமுகவில் பொருளாளர் பதவி.

நிர்வாகிகளுக்குள் போட்டி
தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை விட பொருளாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் சிவி சண்முகம் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அவரது பெயர்கள் அடிபடுகின்றன. ஏற்கனவே பதவி வகித்தவர் என்ற அடிப்படையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கைகளால் அதற்கான வாய்ப்பு சற்று மங்கியுள்ளது.

அரசியல் அஸ்தமனம்
பொருளாளர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதை பற்றி தற்போது பேச வேண்டாம் என வாய்மொழி உத்தரவு நிர்வாகிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிமுகவின் பொருளாளர் பதவி குறித்த வரலாற்றை பார்க்கலாம். அதற்கு முன்னதாக அதிமுக பொருளாளர் பதவியில் இருந்தவர்கள் அதற்கு பிறகு அதிமுகவில் அவ்வளவாக ஜொலிக்க முடியாது என்கின்றனர் மூத்த நிர்வாகிகள். காரணம் அதிமுகவில் பொருளாளராக இருந்தால் அதன்பின் அவர்கள் அரசியல் வாழ்வு அஸ்தமனம் தான்.

நிர்வாகிகள் குழப்பம்
உதாரணமாக அதிமுக முன்னாள் பொருளாளர்களான சௌந்தரபாண்டி, துரைராஜ், பண்ருட்டி ராமச்சந்திரன், திருப்பத்தூர் மாதவன் ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தற்போது வரை பலருக்கு தெரியாது. அதற்கு பிறகு அவசர பொதுக்குழு மூலம் பொருளாளர் பதவியில் நியமிக்கப்பட்ட கண்ணப்பன் அரசியலில் தற்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இதற்கு அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார்.

மூத்த நிர்வாகிகள்
அதற்கு பிறகு 15 ஆண்டுகள் அவருக்கு அரசியல் வனவாசம் தான். அவருக்கு பின்னர் பொருளாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததோடு அதிமுகவின் பலம் பொருந்திய நபராக இருந்தார். அதன் பிறகு அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எங்கிருந்தார் என்பதே பலருக்கு தெரியாது. அந்த வகையில் பொருளாளராக இருக்கும் ஓ பன்னீர் செல்வமும் தற்போது அதே சென்டிமென்டில் சிக்கி உள்ளதாக கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். அடுத்து பதவியை பெறப்போகும் நிர்வாகிக்கும் என்ன நிலை ஏற்படும் என்பதே மூத்த நிர்வாகிகள் பேச்சாக உள்ளது.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications