"ஐஐடி வேலை.." 111 பவுன் அள்ளித் தந்த பெண் வீட்டார்! அப்புறம்தான் தெரிந்தது லீலை! சென்னையில் பரபரப்பு
சென்னை: மனைவி மற்றும் குழந்தை இருப்பதை மறைத்து, ஐஐடியில் வேலை செய்வதாக மோசடி செய்து, பெண் மருத்துவரை திருமணம் செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் மகள், அசோக் நகர் மாநகராட்சி சுகாதாரத்துறையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான பிரபாகரன் என்பவருக்கும், கடந்த 2020 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
அப்போது ஐ.ஐ.டியில் பணியாற்றுவதாக கூறிய மணமகன் பிரபாகரனுக்கு, பெண் வீட்டார் 111 பவுன் நகையும், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

ஐஐடி வேலை பொய்
இந்நிலையில், திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனது கணவருக்கு மதுபழக்கம் இருப்பது தெரியவந்ததால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். மேலும் தினந்தோறும் இரவில் மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டதால், கணவர் மீது பெண் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பற்றி விசாரித்தபோது, ஐ.ஐ.டியில் பணிபுரிந்து வருவதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்தது, அந்த பெண் மருத்துவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

2வது திருமணம்
இதற்கிடையில், பிரபாகரனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதும், அதை மறைத்து தன்னை 2-வதாக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் பெண் மருத்துவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். மேலும், வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று கபளீகரம் ஆடியுள்ளார். இதுகுறித்து கேட்டால், பெண் டாக்டரை தினசரி அடித்து துன்புறுத்தி, சித்தரவதை செய்து வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், பெண் மருத்துவரின் குடும்பத்தினரையும் பிரபாகரன் மிரட்டியுள்ளார்.

காவல் நிலையத்தில் புகார்
இதற்கு மேலும் பொறுத்துகொள்ள முடியாது என முடிவெடுத்த அந்தப் பெண் மருத்துவர், சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தான் ஏமாற்றப்பட்டதாக கணவர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார், வரதட்சனை கொடுமை, ஆபாசமாக பேசுதல், நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர் கதையாகும் மோசடிகள்
திருமண மோசடியால் கைது செய்யப்படும் சம்பவங்களும், அதுதொடர்பான செய்திகளும் ஊடகங்ககள் நாள்தோறும் வெளியாகி அம்பலப்படுத்தப்பட்டும், சென்னை போன்ற பெருநகரில், இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்கதையாகி வருவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications