சென்னை காதல் ஜோடியை புனே வரை சென்று பிரித்த போலீஸ்காரர்.. இறுதியில் மறக்க முடியாத பரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் மாற்று சமூக இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவருடன் மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்றவர், அங்கேயே திருமணமும் செய்துள்ளார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர், மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து புனே வரை சென்று பெற்றோருக்கு ஆதரவாக, காதல் தம்பதியை பிரித்த சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை வானகரத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர், வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்தால் அவரை தான் திருமணம் செய்வேன் என்று அந்த பெண் பிடிவாதமாக இருந்துள்ளார். ஆனால் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பெண், தனது காதலனை அழைத்துக்கொண்டு, வீட்டை விட்டே வெளியேறிவிட்டார்.

An unforgettable gift for COP who traveled to Pune to separate a romantic couple from Chennai

இருவரும் மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்றள்ளனர். அங்கு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, பெண்ணின் பெற்றோர் வானகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் பெண்ணை காணவில்லை எனற அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதனிடையே காதல் ஜோடி, புனே சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. அவர்களை சென்னை அழைத்துவர போலீஸ்காரர் கண்ணன், பெண்ணின் பெற்றோர் உடன புனே சென்றுள்ளார். புனேவில் காதல் திருமண ஜோடி தங்கியுள்ள வீட்டை கண்டு பிடித்தனர். போலீஸ்காரர் கண்ணன், அந்த இளம்பெண்ணை காதல் கணவரிடம் இருந்து பிரித்து, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளாராம்.

அதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இந்த தகவல் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலால அங்குள்ள போலீசுக்கு தெரிய வந்ததது. போலீசார் விரைந்து வந்து போலீஸ்காரர் கண்ணன் உள்பட அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காதலர்கள் இருவரும் மேஜர் வயதை எட்டியவர்கள். இதனால் புனே போலீசார், காதல் தம்பதிக்கு ஆதரவாக கூறினார்கள். மேலும் காதல் ஜோடியை பிரித்த புகாரில் போலீஸ்காரர் கண்ணன் மீதும், இளம்பெண்ணின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைதும் செய்துள்ளார்கள்.

காவலரை கைது செய்த விவகாரம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு கமிஷனர் அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர. ஏனெனில் வழக்கு விஷயமாக வெளிமாநிலத்துக்கு செல்லும்போது, உயர் காவல் அதிகாரிகளிடம் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம். ஆனால் போலீஸ்காரர் கண்ணன், உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் புனே சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு வழக்கிலும் சிக்கியது தெரியவந்தது.

எனினும் சென்னை உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கண்ணனையும், பெண்ணின் பெற்றோரையும் புனே போலீசார் ஜாமீனில் விடுவித்தார்களாம். காதல் திருமண தம்பதியை பிரித்து தவறு செய்த போலீஸ்காரர் கண்ணன், நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டார். அவரை கடுமையாக எச்சரித்த அதிகாரிக்், பின்னர் பணியிடை நீக்கம் செய்தனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+