சென்னையில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. சிக்கிய சினேகா.. தொழில் அதிபர் தந்த மறக்க முடியாத ட்விஸ்ட்
சென்னை: சென்னையில் சினிமா பட பாணியில் இளம்பெண் மூலம் ஆசை வலைவீசி ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறித்திருக்கிறது ஒரு கும்பல். ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் முரளி என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் பூஜா என்ற பெயரில் இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். அவருடன் முரளி நட்பாக பழகி உள்ளார். ஒரு ஆனால் ஓட்டலில் மது அருந்திய போது, அங்கு வந்த கும்பல் பணத்தை பறித்தது. எப்படி சிக்கினார்கள் என்பது பற்றி பார்ப்போம்.
சென்னையில் சில நேரங்களில் பணக்காரர்களை குறி வைத்து பணம் பறிக்கும் கும்பல்கள் சினிமா பாணியை கையில் எடுக்கிறார்கள். அந்த வகையில் சினிமாவை மிஞ்சும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அழகான பெண்ணை நட்பாக பழகவிட்டு, சபலத்தில் சிக்க வைத்து, அதன் மூலம் பணம் பறிக்கும் முயற்சிகள் நடக்கிறது. ஹனி டிராப் டெக்னிக்குகளை பணம் பறிக்கும் கும்பல்கள் செயல்படுத்துகின்றன. அப்படித்தான் சென்னையில் ஒரு தொழில் அதிபருக்கு நடந்துள்ளது.

முரளிக்கு வலை வீசிய பெண்
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த 47 வயதாகும் முரளி என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் பூஜா என்ற பெயரில் இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி நட்பாக பேசியிருக்கிறாராம். ஆரம்பத்தில் நட்பாக பேசி ஆசை வார்த்தைகளை கூறினாராம். அப்படியே ஒரு நாள் நேரில் உங்களை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பலமுறை இருவரும் ஓட்டல்களுக்கு சென்று உணவு அருந்தி உள்ளார்.
மது அருந்தியுள்ளார்கள்
சம்பவத்தன்று நேரில் சந்திக்க வேண்டும் என கூறியதின் பேரில் அதே பகுதியில் ஓட்டலில் அறை எடுத்து பெண்ணும் முரளி ஆகிய இருவரும் மது அருந்தினார்களாம். பின்னர் இரவு நேரத்தில் திடீரென அந்த அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்த இரண்டு பேர் முரளியை அடித்து என் மனைவியுடன் இருக்கிறாய் நீ யார்? என கேட்டு தகராறு செய்தார்களாம்
தங்க செயின் பறிப்பு
பின்னர், முரளியை காரில் மாமல்லபுரம் கடத்தி சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்க வைத்து முரளியை தாக்கி ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் 9 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். மேலும் ரூ.3 லட்சம் அளித்தால் இதுகுறித்து வெளியே சொல்ல மாட்டோம் என மிரட்டி விட்டு சென்றார்களாம். இதுகுறித்து முரளி அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நான்கு பேர் கைது
இது தொடர்பாக விருகம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திக் அவரது நண்பர்கள் பூபாலன், சுந்தரமூர்த்தி, சினேகா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய போது ஹனிடிராப் விவகாரம் தெரியவந்தது. ஒரு திரைப்படத்தில் ஜோதிகா தனது ஆசை வலையில் கதாநாயகன் சரத்குமாரை வீழ்த்தி தனது கும்பலுடன் சேர்ந்து பணத்தை பறிக்க திட்டம் போடுவார். அதே பாணியை கையில் எடுத்துள்ளார் பெண்.
சினிமா பாணியில் வியூகம்
இதன்படி கார்த்திக், பூபாலன், சுந்தரமூர்த்தி, சினேகா ஆகிய 4 பேரும் வேகமாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஸ்கெட்ச் போட்டுள்ளார். இதன்படி போலியாக ஒரு முகநூல் கணக்கை தொடங்கி அதில் தொடர்பு கொண்டு பேசும் நபரிடம் சினேகா மூலம் ஆசை வார்த்தைகளை கூறி நேரில் வரவழைத்து மிரட்டி பணம் பறித்து வந்திருக்கிறார்கள். அப்போது தான் ரியல் எஸ்டேட் அதிபர் முரளி கார்கள் மற்றும் நிலங்களை விற்பனை செய்வதற்காக விளம்பரங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதையறிந்து அவரிடம் பணம் பறிக்க இந்த கும்பல் திட்டம் தீட்டியுள்ளனர்.
சினேகா சிக்கினார்
இதற்காக தனது கும்பலை சேர்ந்த சினேகாவை முரளியுடன் பழக செய்து அவரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பணம் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்களாம். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதேபோன்று வேறு யாரையெல்லாம் மோசடி செய்து பணம் பறித்துள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications