சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது நியாயமா? இவர்களுக்கு ரூ.3 லட்சம்.. ஜூலையில் 3 பேர் இறந்தார்களே.. இதிலும் பாகுபாடா - அன்புமணி

Google Oneindia Tamil News

சென்னை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சத்தை அரசு நிவாரணமாக அறிவித்துள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் இதே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 3 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அரசு வழங்காதது ஏன் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "தஞ்சை மாவட்டம் பூண்டி அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை!

Anbumani demands TN government to give relief for 3 people drowned in river

இதே கொள்ளிடத்தில் கடந்த ஜூலை மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அணைக்கரை மதகு சாலையைச் சேர்ந்த ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, அடுத்த சில நாட்களில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்!

உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்போதே வலியுறுத்தியிருந்தேன். எனினும், அவர்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகளில் பாகுபாடு காட்டப்படுவது நியாயமற்றது. இந்தத் தவறுக்கு அதிகாரிகளின் அலட்சியம் காரணமா அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை. நடந்த தவறை சரி செய்யும் வகையில் ஜூலை மாதம் இறந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary
Pattali makkal katchi leader Anbumani Ramadoss has said that while the government has announced relief of Rs.3 lakh each to the families of 6 people who drowned in the Kollidam river, why did the government not provide relief assistance to the families of the 3 people who drowned in the same Kollidam river last July?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X