இவ்வளவு அழகா பாட்டு பாடுறாரே! அன்புமணி ராமதாஸின் ‘96’! ஆங்கில பாட்டு பாட.. தோழர், தோழிகள் கைதட்ட..!
சென்னை : அரசியல் அறிக்கை என படுபிசியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது பள்ளிக் கால தோழர்களை சந்தித்ததோடு, அவர்கள் மத்தியில் ஆங்கில பாடலை உற்சாகமாக பாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கட்சியை மறு சீரமைப்பு செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 60 கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்த அவர், தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த கட்ட பயணங்களை மேற்கொண்டார்.

அன்புமணி ராமதாஸ்
குறிப்பாக வட மாவட்டங்களில் பாமக வலுவாக இருக்கும் பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடிநீர் பிரச்சினைகள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் காவிரி உபநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளித் தோழர்கள்
இந்நிலையில் அரசியல், அறிக்கை என படுபிசியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது பள்ளிக் கால தோழர்களை சந்தித்தோடு, அவர்கள் மத்தியில் ஆங்கில பாடலை உற்சாகமாக பாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. அன்புமணி ராமதாஸ் தொடக்கத்தில் திண்டிவனத்தில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் சேர்ந்து, அங்கு முதலாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் ஏற்காட்டில் உள்ள புனித இருதய மகளிர் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். தொடர்ந்து ஏற்காட்டில் உள்ள மான்ட்ஃபோர்ட் ஆங்கிலோ இந்திய பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தார்.

முன்னாள் மாணவர்கள்
புகழ்பெற்ற மான்ட்ஃபோர்ட் ஆங்கிலோ இந்திய பள்ளி ஆண்கள் பள்ளி ஆகும். இந்த நிலையில் தான் முன்னாள் மாணவர்கள் ஏற்பட்டின் பேரில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் சந்தித்து பள்ளி காலங்களில் நடந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவில் ஒவ்வொருவரும் தங்களின் கடந்த கால நினைவுகளையும், தற்போதைய சூழ்நிலைகளையும் கலந்துரையாடினர். தொடர்ந்து முன்னாள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, ஆங்கில பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார்.

பாடல் பாடிய அன்புமணி
இதனை அவரது பள்ளிக் கால தோழர்களும், அவரது குடும்பத்தினரும் கைதட்டி மகிழ்ந்தனர். இந்த காட்சிகள் தான் தாற்போது சமுகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அந்த காலத்தை மீண்டும் ஒரு முறை நினைவு கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை எடுத்தோம். ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்து பழைய நினைவுகளில் நீந்த வைத்து விட்டார்கள் என அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications