அன்புமணி போட்ட விதை.. மரமாக்கிய பிரதமர் மோடி.. சென்னை தேசிய முதியோர் நல மையம் திறப்பின் பின்னணி
சென்னை: சென்னை கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் ரூ.157 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்தை இன்று பிரதமர் திறந்து வைத்தார். இந்நிலையில் தான் 17 ஆண்டுகளுக்கு முன் நான் விதைத்த விதை இன்று முதியோரை காக்கும் மரமானதில் மகிழ்ச்சி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெருமையாக கூறியுள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறார்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். இன்று ராஜ்கோட்டில் நடந்த விழாவில் பல்வேறு திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட், பஞ்சாப் மாநிலம் பதிண்டா, ரேபரேலி (உத்தரப்பிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்கம்) மற்றும் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் தமிழ்நாடு உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.11,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும், தொடங்கியும் வைத்தார்.
தமிழ்நாட்டில் சென்னை கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் ரூ.157 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்தை இன்று பிரதமர் திறந்து வைத்தார். இந்நிலையில் தான் 17 ஆண்டுகளுக்கு முன் நான் விதைத்த விதை இன்று முதியோரை காக்கும் மரமானதில் மகிழ்ச்சி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெருமையாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:
சென்னை கிண்டி கிங் நிறுவன வளாகத்தில் ரூ.157 கோடியில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மையத்தை (National Centre for Aging), குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். மூத்த குடிமக்களின் நலனுக்காக, இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ்சுக்கு அடுத்தப்படியாக திறக்கப்படும் இரண்டாவது சிறப்பு மருத்துவமனை இதுவாகும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை கிங்ஸ் நிறுவன வளாகம் ஆகிய இரண்டிலும் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையத்திற்கான விதையை 17 ஆண்டுகளுக்கு முன் விதைத்ததும், அவற்றுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததும் அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய நான் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்தியாவில் தேசிய முதியோர் நல மையத்தை அமைக்க வேண்டும் என்பது எனது கனவு. உலகிலேயே முதன்முறையாக மூத்த குடிமக்களின் நலனுக்காக மருத்துவ கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியது அமெரிக்கா. அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் இத்தகைய மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மூத்த குடிமக்கள் இருப்பதால் இங்கும் அத்தகைய மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அதன்பின் 2004-ஆம் ஆண்டில் மத்திய சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற நான் இந்தியாவின் முதல் தேசிய முதியோர் நல மையம் சென்னையிலும், இரண்டாவது மையம் டெல்லி எய்ம்ஸ் வளாகத்திலும் அமைக்கப்படும் என்று அறிவித்தேன்.
சென்னையில் தேசிய முதியோர் நல மையம் அமைப்பதற்கு 2007-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தம் 112 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் அப்போதைய தமிழக அரசு தேசிய முதியோர் நல மையம் அமைக்க நிலம் ஒதுக்கவில்லை. எனது ஓராண்டு கால வலியுறுத்தலுக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு சென்னை கே.கே.நகரில் அதற்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதன்பின் 8 ஆண்டுகள் ஆகியும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை; அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும் செலவழிக்கப்படவில்லை.
மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு 2016-ஆம் ஆண்டில் டெல்லி மற்றும் சென்னையில் தேசிய முதியோர் நல மையம் அமைக்கும் திட்டத்திற்கு புத்துயிரூட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னையில் 2019-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டு, கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வந்த மருத்துவமனை, இன்று முதல் முதியோர் நல மையமாக செயல்படவிருக்கிறது'' என பெருமையாக கூறியுள்ளார்.
-
63000 தொழில் நிறுவனங்கள் மூடியாச்சு! மின் கட்டணத்தை யாருக்கும் உயர்த்தவே கூடாது! அன்புமணி வலியுறுத்தல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications