தைலாபுரம் இல்லத்திற்குச் சென்ற அன்புமணி.. ராமதாஸ் உடனான மோதலுக்கு பிறகு திடீர் விசிட்! பின்னணி என்ன?
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி சென்றுள்ளார். ராமதாஸ் உடனான முரண்பாட்டைத் தொடர்ந்து, தைலாபுரம் இல்லத்திற்கு செல்லாத அன்புமணி இன்று திடீரென அங்கு சென்றுள்ளார்.
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அன்புமணி தரப்பு பாமக அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றனர்.

இதற்கிடையே மாம்பழம் சின்னம் மற்றும் கொடி அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று ஒதுக்கீடு செய்து அன்புமணியின் கட்சி அலுவலக முகவரிக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ராமதாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராமதாஸின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு செய்தார். அதில், கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டையே அணுகும்படி உத்தரவிட்டது. மீண்டும் ஐகோர்ட்டை நாடினார் ராமதாஸ். ராமதாஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அன்புமணி தரப்பு வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு - சசிகலாவுடன் இணைந்து இந்த சட்டசபை தேர்தலைச் சந்திக்கும் நிலையில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு அக்கட்சியின் தலைவர் அன்புமணி சென்றுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் சூழலில் நீண்ட நாட்கள் கழித்து இன்று தைலாபுரம் சென்றுள்ளார் அன்புமணி.
அன்புமணி இன்று கடலூருக்கு பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றார். அதற்கு செல்லும் வழியில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற அன்புமணி அவரது தாயார் சரஸ்வதியை சந்தித்து பேசிவிட்டு அங்கு உணவு அருந்தியுள்ளார். அதன்பிறகு அவர் கடலூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். தீவிர பிரச்சாரத்திற்கு இடையில், தைலாபுரம் தோட்டத்தில் தனது தாயாரை அன்புமணி சந்தித்தது கவனம் பெற்றுள்ளது.
-
செளமியா அன்புமணிக்கு எதிராக.. தர்மபுரியில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யும் ராமதாஸ்.. பாமகவுக்கு செக்! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications