அனிதாவின் அழுகையும் நெட்டிசன்களின் எரிச்சலும்... வலிமையை நிரூபிப்பாரா #Anithasampath
நான் என் புருஷனை நினைச்சு கவலைப்படுறேன் என்று சொல்லி அனிதா சம்பத் கதறி கதறி அழுக அதைப்பார்த்த நெட்டிசன்கள் உலகமே அவரை நினைச்சுதான்மா கவலைப்படுது என்று சொல்லி கமெண்ட் போட்டு வருகின்றனர்.
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் அனிதா சம்பத் வந்த நாளில் இருந்தே அவரை சுரேஷ் டார்கெட் செய்ய ஆரம்பித்து விட்டார். அனிதாவிற்கும் சுரேஷிற்கும் ஏதாவது விஷயத்தை வைத்து சண்டை வந்து கொண்டேதான் இருக்கிறது. விஜயதசமி பண்டிகை கொண்டாட்டத்திலும் அனிதா சொன்ன வார்த்தையை பிடித்து வம்பிழுத்து சண்டையை மூட்டிவிட அது அனிதாவின் இதயத்தை நொறுக்கி விட்டது, பாத்ரூமிலும், கன்பெஷன் ரூமில் பிக்பாஸ் முன்பும் கதறி கதறி அழுதார் அனிதா. அந்த பெண்ணின் அழுகை பரிதாபத்தை ஏற்படுத்துவதை விட பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அனிதாவுக்கு ஆதரவான குரல்களும் கேட்கத்தான் செய்கிறது.
விஜய் டிவி குரூப்பில் இருந்து சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கிறார்கள். ஜீ தமிழ் ஆங்கர் அர்ச்சனா ரியோவின் ஆதரவாளராகவே மாறிவிட்டார், ஷிவானி, ரம்யா பாண்டியன், சனம், சம்யுக்தா ஆகியோர் நேரத்திற்கு தக்க மாறிக்கொள்கிறார்கள். சோமு, ஆரி,பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் வீட்டிற்குள் அவ்வப்போது திரி கொளுத்தி போடுகிறார்கள். சன்டியில் இருந்த வந்த அனிதா கார்னர் செய்யப்படுகிறார்.
அனிதாவிற்கு அடிக்கடி ஆரி அட்வைஸ் செய்கிறார், ஆகாத மாமியார் கை பட்டா குத்தம் கால் பட்டால் குத்தம் என்பது போலத்தான் இருக்கிறது அனிதாவை குத்தம் சொல்லும் சுரேஷ் பேச்சு. அட அந்த பொண்ணு ஏதோ தெரியாம சொல்லிருச்சு என்று விட்டு விடாமல் அதையே பேசி பேசி புண்ணை கீறி ரணமாக்கி கொண்டிருக்கிறார் சுரேஷ். மாறி மாறி அழுகிறார் அனிதா, ஆனாலும் அவரது அழுகை பரிதாபத்தை சம்பாதிப்பதை விட சிலரது எரிச்சலை சம்பாதித்துள்ளது. அனிதா ஆர்மியோ அவருக்கு ஆறுதலாகவே பதிவிட்டு வருகின்றனர். இன்னும் எத்தனையோ எதிர்ப்புகள் வரும் வலிமையாக போராடு அனிதா என்று ஆறுதல் பதிவும் சமூகவலைத்தளத்தில் உள்ளது.
|
அழுவதை நிறுத்தட்டும்
நான் என் புருஷனை நினைத்துதான் அழுகிறேன் என்று அனிதா கண்ணீர் விட்டு கதறியதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டிரு்கிறார்கள். உலகமே அவரை நினைத்துதான் அழுகிறது என்று கூறி வருகின்றனர். அனிதா அழுது அழுது சாதிக்கப்போவது ஒன்றுமில்லை. அவர் இதன் மூலம் அவரது கணவருக்கு நல்ல பெயர் பெற்று தந்து விட முடியாது. முதலில் அழுவதை நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் அனிதா அவருக்கு கொடுத்த வாய்ப்பை வீணடித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
|
அழுகை அனிதா
அனிதாவின் அழுகையை பலரும் விரும்பவில்லை. ஒரு நெட்டிசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிதாவின் சிரித்த முகம் நேற்று அழுகை முகமாக மாறிவிட்டது. சுயரூபத்தை தெரிந்து கொண்டனர் அனிதா சம்பத் சைக்கோ என்று பதிவிட்டுள்ளார்.
|
ஓவர் பேச்சு
அனிதா சம்பத்தில் எல்லோரையும் எரிச்சலூட்டுகிறார். எக்ஸ்பிரசன் இல்லாத முகம், ஓவர் பேச்சு, ஓவர் திங்கிங் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க தகுதியற்றவர் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
|
வலிமையாக இரு அனிதா
அனிதா மனதளவில் உடைந்து போயிருக்கிறார். நீங்கள் வலிமையானவர் இன்னும் போக போக நிறைய பிரச்சினை வரலாம், மென்டல் டார்ச்சர் வரும், அனைத்தையும் நீங்கள் சந்தித்து தான் ஆகவேண்டும். போர்க்களத்தில் எதிர்த்து போராடித்தான் ஆகவேண்டும். வலிமையாக இருங்கள் அனிதா என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன். அனிதா வலிமையாக போராடி வீட்டிற்குள் தாக்குபிடிப்பாரா?அல்லது வெளியேறுவாரா பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications