சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொன்முடி Vs முருகன்! கண்முன்னே வந்த ‘மதுரை’ சம்பவம்! சாமர்த்தியமாய் சமாளித்த அண்ணா பல்கலை.! சிறப்பு!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் பெயர் மீண்டும் இடம்பெற்ற நிலையில், சர்ச்சையை தவிர்க்க சாதுரியமாய் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் யோசித்துள்ளதாக பல்கலைக் கழக பேராசியர்கள் பேசி வருகின்றனர்.

Recommended Video

    Anna University Convocation | உயர்கல்வியில் Tamilnaduதான் முதலிடம் - Minister Ponmudi பெருமிதம்

    கடந்த 13ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது அதில் கௌரவ அழைப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகனை ஆளுநர் அழைத்திருந்தார்.

    மேலும் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சர் பொன்முடியின் பெயருக்கு மேல் எல்.முருகனின் பெயர் இடம் பெற்றது. இதனால் வருத்தமடைந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

    தமிழ் உமது முரசம்.. அண்ணா பேச்சை சுட்டிக்காட்டி பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழ் உமது முரசம்.. அண்ணா பேச்சை சுட்டிக்காட்டி பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

     அமைச்சர் பொன்முடி

    அமைச்சர் பொன்முடி

    இது தொடர்பாக சென்ன தலைமை செயலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னார் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிம் " ஆளுநரின் செயல்பாடு பாஜகவின் பிரச்சாரம் போல உள்ளது. ஒன்றிய அரசால் நியமிக்கப்படுவதால் ஒன்றிய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மதுரை பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசிக்காமல் காமராஜர் பல்கலைகழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புறக்கணிப்பு

    புறக்கணிப்பு

    பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கெளரவ விருந்தினராக இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அதுவும் அவர் பெயருக்கு பெயருக்கு கீழ் என பெயர் இடம்பெற்றிருக்கிறது." என கூறினார்.

    எல்.முருகன்

    எல்.முருகன்

    இந்நிலையில் இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அதில் மீண்டும் மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பிரச்சனை எழக்கூடாது

    பிரச்சனை எழக்கூடாது

    விழா அழைப்பிதழ் பெயர் தொடர்பாக இந்த முறை அமைச்சர்கள் முருகன், பொன்முடி பிரச்சனை எழக்கூடாது அதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இருவரின் பெயரையும் சரிசமமாக போட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அழைப்பிதழ் தயார் செய்துள்ளார். இது தற்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.

    English summary
    While Union Minister L. Murugan's name appeared again in the convocation ceremony of Anna University, Chennai, the university professors are saying that the administration of Anna University has cleverly thought to avoid controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X