நாங்க கூட என்னமோன்னு நினைச்சோம்! சபாஷ் அண்ணாமலை! அசத்திடீங்க போங்க! டெல்லியிலிருந்து வந்த பாராட்டு!
சென்னை: சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு அக்கட்சியின் மேலிடத்துக்கு மன நிறைவை தந்துள்ளதாம்.
தாங்கள் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலாகவே வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக வட மாநிலங்கள் அளவுக்கு தமிழகத்தில் மோடிக்கு வரவேற்பு விழா ஏற்பாடுகள் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் தொண்டர்களை சென்னைக்கு திரட்டி வந்து தேசியத் தலைமையின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார் அண்ணாமலை.

மோடி வருகை
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று தமிழகம் வந்து சென்ற மோடிக்கு கட்சி சார்பில் மிகப் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்கால் ஆட்டம், என 25 விதமான முறையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுமட்டுமல்லாமல் பாஜக கொடிகளும், வரவேற்பு விளம்பரப் பதாகைகளும், சுவரொட்டிகளும் பிரதமர் மோடியை வெகுவாக கவர்ந்தன.

உற்சாக மிகுதி
இதன் காரணமாகவே தனது பாதுகாப்பு வளையத்தையும் மீறி கார் கதவை சட்டென திறந்து உற்சாக மிகுதியில் பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்து சென்றார் மோடி. பொதுவாக இது போன்ற காட்சிகளை உத்திரப்பிரதேசம், குஜராத், போன்ற மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் செல்லும் போது தான் காண முடியும். ஆனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்றைய தினம் பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் வெகுவளவில் திரண்டு வந்து பிரதமருக்கு வரவேற்பு கொடுத்தது அக்கட்சியின் தேசிய தலைமைக்கு மிகுந்த மன நிறைவை கொடுத்திருக்கிறது.

ஜூனியர் அண்ணாமலை
இதன் காரணமாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. ஜூனியரான அண்ணாமலை பிரதமரின் தமிழக வருகை நிகழ்ச்சியை எப்படி நடத்தப் போகிறார் எனப் பார்ப்போம் என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்த தமிழக பாஜக சீனியர்களே இப்போது புருவம் உயர்த்தியுள்ளார்களாம். எது எப்படியோ அண்ணாமலைக்கு இதன் மூலம் புது உற்சாகம் கிடைத்திருப்பது மட்டும் உண்மை.
Recommended Video

மாவட்டத் தலைவர்கள்
பாஜக மாவட்டத் தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கில் தொண்டர்களை சென்னைக்கு அழைத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பலரும் இனி அடுத்தடுத்து மாதம்தோறும் தமிழகம் நோக்கி வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications