முதல்வர் ஸ்டாலினே FDFS போவார்.. கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வார்.. அண்ணாமலை அட்டாக்!
சென்னை : அடுத்து வரக்கூடிய படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வார் என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Recommended Video
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக தகவல் வெளியான நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் வேறு எந்த முதல்வராவது சினிமா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு செல்வாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
ஆர்ஆர்ஆர் பட நிகழ்ச்சிக்கு போன கர்நாடக முதல்வர்! வார்த்தையை விட்ட அண்ணாமலை! வறுத்து எடுத்த திமுக தலை

சினிமா துறை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சினிமா துறையையே உதயநிதி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே வெளியிட்டு வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து, பாஜகவினர் அவ்வப்போது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன்
இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல் வெளியீடு, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பாடல்களையும், ட்ரெய்லரையும் பிரமாண்ட நிகழ்ச்சியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.

ட்ரெய்லரை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்
பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரை முதலமைச்சர் ஸ்டாலினை வைத்து வெளியிட, படக்குழு முதல்வரிடம் அனுமதியையும் கேட்டிருக்கின்றனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஓகே சொல்லி இருப்பதாகவும், செப்டம்பர் 6ஆம் தேதிக்கு இசைவு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் ட்ரெய்லரை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட உள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் தீயாகப் பரவி வருகிறது.

எந்த முதல்வராவது
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதை விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் வேறு எந்த முதல்வராவது சினிமா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு செல்வாரா?

பாலாபிஷேகம் செய்வார்
அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், ஏதாவது ஒரு படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கு போவார். அடுத்து வரக்கூடிய படத்திற்கு முதல்வர் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்தாலும் செய்வார், ஏனென்றால் அவருக்குத் தெரியும், கட்சிதான் குடும்பம், குடும்பம் தான் கட்சி என்று. இரண்டையும் இணைப்பது சினிமா தான் என முதல்வர் நன்றாக உணர்ந்திருக்கிறார் என விமர்சித்துள்ளார்.