என் வீட்டு கன்னுகுட்டி..என்னோட மல்லுகட்டி! அண்ணனுக்கு கோபம் வந்துருச்சு! மோடி அரசை விளாசிய அண்ணாமலை!
சென்னை: தமிழக பாஜகவின் முக்கிய முகங்களின் ஒருவராக இருந்த அண்ணாமலை தற்போது தனி இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அரசியல் கட்சியாக பரிணமிக்க இருக்கும் 'வி த லீடர்ஸ்' தற்போது உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் அண்ணாமலை. கட்சியிலிருந்து விலகுவதற்கு முன்னும், தற்போதும் நேரடியாகவே மத்திய அரசை அண்ணாமலை தாக்கி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது மேகதாது அணை விவகாரம். காவிரியின் குறுக்கே அணை கட்டிய தீருவோம் என கர்நாடகா பேசி வரும் நிலையில் தமிழக அரசு அதற்கு அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வருகிறது.

மேலும் ஆண்ட கட்சிகளான அதிமுகவும் - திமுகவும் தமிழக வெற்றிக் கழக அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு காவிரியின் குறுக்கே அணைகட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை என பேசி இருப்பது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காவிரி பிரச்சனை
வழக்கம்போல் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பி வருகிறது. ஆச்சரியப்படும் வகையில் மத்திய அரசை நேரடியாக விமர்சித்து இருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுத்துள்ள அவர்," காவிரி விவகாரம் தொடர்பாக மத்தியில் நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு அன்றைய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கிட்டு சட்டத்தின் படி காவிரி கடை மட்டத்தில் பாயும் மாநிலங்களின் ஒப்புதல் இன்றி நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என தெரிவித்து இருந்தார்.
காவிரி பிரச்சனை
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது தமிழக முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசை நேரடியாக விமர்சித்து பேசி இருந்தார் அண்ணாமலை. தற்போது கர்நாடகா தமிழ்நாடு இடையேயான காவிரி விவகாரத்திலும் மத்திய அரசை நேரடியாக விமர்சித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை
தமிழக பாஜகவில் திடீர் வளர்ச்சிக்கு அண்ணாமலையின் பங்கு மிக முக்கியமானது. ஊடக விவாதங்களில் கூட பங்கெடுக்க முடியாமல் இருந்த பாஜக தமிழிசையின் வரவால் ஓரளவு கவனம் பெற்றது. அதற்குப் பிறகு எல் முருகன் தலைவராக பதவியேற்ற போதும் இளைஞர்கள் செல்வாக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து, பதவியை துறந்து, விவசாயத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை திடீரென தமிழக பாஜகவில் இணைந்த உடனேயே அவருக்கு துணை தலைவர் பதவியும் சில மாத இடைவெளியில் தலைவர் பதவியும் கிடைத்தது.
பாஜக
அதிரடியான அரசியல் பேச்சு கூட்டணி கட்சிகளையும் விட்டு வைக்காமல் விலாசும் குணாதிசயம் அண்ணாமலையின் செல்வாக்கை இளைஞர்களிடையே அதிகரித்தது. கூட்டணி தொடர்பாக மத்திய அரசுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு வளர்ந்தார். அதிமுக வேண்டாம் தனியாகவே நிற்போம் என மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோல்வி கிடைத்தது பாஜகவுக்கு.
நயினார் நாகேந்திரன்
இதனால் மெல்ல மெல்ல அண்ணாமலையின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெல்ல வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி அவசியம் என முன்னாள் தலைவர்கள் டெல்லி தலைமையில் சொல்ல, அண்ணாமலை விலக்கப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக்கப்பட்டார். ஆனால் 2026 தேர்தலிலும் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதற்குப் பிறகு அண்ணாமலைக்கு கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோல எதுவும் நடக்கவில்லை.
வீ த லீடர்ஸ்
ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்துக்கே சென்ற அண்ணாமலை டெல்லி தலைவர்களை சந்தித்து பலனளிக்கவில்லை. இதை அடுத்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்டதாக சொன்னவர் திடீரென பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்ததோடு தற்போது வீ த லீடர்ஸ் அமைப்பையும் தொடங்கி இருக்கிறார். 50 லட்சம் என்ற உறுப்பினர் எண்ணிக்கையை தொட்டால் தான் அரசியல் கட்சியாக மாற்றுவேன் என சொல்லி வரும் அண்ணாமலை, இடையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை ஒழிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அண்ணாமலை ஆதரவாளர்கள்
அதே நேரத்தில் பாஜகவின் மத மொழி அரசியல் தமிழகத்தில் எடுபடாது. திராவிட அரசியல் தான் சரி என தெரிந்து கொண்ட அண்ணாமலை தற்போது மோடி அரசை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கி இருக்கிறார். இது அவரது ஆதரவாளர்களை குழப்பமான மனநிலைக்கு தள்ளி உள்ளது. பாஜகவில் தான் அண்ணாமலையின் ஆதரவாளர்களாக மாறியிருக்கும் நிலையில், தற்போது அண்ணாமலையே பாஜகவை விமர்சிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் அண்ணாமலையின் வழி தான் சரி அரசியல் என்று வந்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் தவறில்லை என்ற மனநிலைக்கும் சிலர் வந்திருப்பதாக சொல்கின்றனர்.


Click it and Unblock the Notifications
