ரோஜா மேடம் நீங்களா.. அன்னபூரணி அம்மா அரசை பார்த்து ஷாக்கான பக்தர்கள்! எல்லாமே செம்புங்க மக்களே!
சென்னை : திரைப்பட நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தலையில் கிரீடம் கையில் சூலாயுதம் என மீண்டும் வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி செய்து வரும் அன்னபூரணி அரசு அம்மா மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறார்.
Recommended Video
நித்தியானந்தா, பிரேமானந்தா உள்ளிட்ட போலிச் சாமியார்களின் வரிசையில் தற்போது தமிழகத்தில் அதிக அளவு மக்களால் பேசப்படும் நபராக இருப்பவர் அன்னபூரணி அரசு அம்மா.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அவதாரம் தான் எனக் கூறி திடீரென பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவதாக விளம்பரம் செய்யப்பட்ட நிலையில் அவர் யார் என்ன செய்கிறார் என்பது குறித்து விசாரித்த போது தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அன்னபூரணி அரசு அம்மா
நன்றாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் மக்களை அழைத்து வந்து அமர வைத்து பஞ்சாயத்து செய்து உலகம் முழுவதும் பிரபலமாக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு கணவன் பஞ்சாயத்து குறித்து பேசிய அன்னபூரணி தான் அவர் என்பதனை கண்டுபிடித்த சமூக வலைதளவாசிகள் அவரை ட்ரோல் செய்ய தொடங்கினர்.

ஆன்மீக சேவை
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆன்மிகத்தை பக்தர்களுக்கு வாரி வழங்கியே தீருவேன் என அடம் பிடித்து ஆன்மீக சேவை செய்து வருகிறார். அன்னபூரணி அரசு அம்மா. போதாக்குறைக்கு நித்தியானந்தா ஏற்கனவே ஆசிரமம் வைத்திருந்த ஆன்மீக பூமியான திருவண்ணாமலையிலேயே ஒரு இடத்தை வாங்கி அதில் கொட்டாய் அமைத்து பக்தர்களுக்கு ஆன்மீக சேவை ஆற்றி வருகிறார். மேலும் அடிக்கடி பரவச நிலையில் தான் இருப்பதாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

ஆசிரமம்
போதாக்குறைக்கு நித்தியானந்தாவை போலவே அருள் ஆசி உரைகளும் தீட்சை வழங்கும் நிகழ்ச்சிகளும் அங்கு அரங்கேறி வருகிறது. பேஸ்புக்கிலும் பக்கம் பக்கமாக ரைட்டர் எழுதி வரும் அன்னபூரணி அடிக்கடி கடவுளை சந்தித்து வருவதாகவும் உடல் என்னும் மாயையை தாண்டி கடவுள் நிலைக்கு தான் உயர்ந்து விட்டதாக புருடாக்களை அள்ளி வீசி வருகிறார் அதனை நம்பி ஒரு கூட்டம் அவர் பின்னால் செல்லத்தான் செய்கிறது.

நெட்டிசன்கள் கிண்டல்
இந்த நிலையில் தான் அன்னபூரணி அரசு அம்மா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தலையில் கிரீடம் கையில் சூலாயுதம் என பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட நடிகை ரோஜா ஒரு சுவாமி படத்தில் நடித்த கெட்டப்பில் பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். தலையில் தங்க கிரீடத்தை அணிந்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பி நிலையில் அது வெறும் செம்பு என்பது தெரிய வந்திருக்கிறது மேலும் கையில் வைத்திருக்கும் சூலாயுதம் உண்மையா அல்லது அட்டையா என சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications